fbpx

சூப்பரோ சூப்பர்..!! திருமணத்திற்கு இன்சூரன்ஸ் பாலிசி..!! என்னென்ன பலன்கள் கிடைக்கும்..?

இந்தியாவில் உள்ள திருமணத் துறையில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட $50 பில்லியன் வருமானம் ஈட்டப்படுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 3.2 மில்லியன் திருமணங்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் மட்டுமே நடக்கிறது. திருமணங்கள் எதிர்பாராத விதமாக ரத்து செய்யப்படும் சமயத்தில் பொருளாதார பாதுகாப்பு வழங்கக்கூடிய ஒரு சிறப்பு வகை இன்சூரன்ஸ் பாலிசி தான் இந்த திருமண இன்சூரன்ஸ். இந்த பாலிசியின் கீழ், வாழ்க்கையின் மிகவும் மறக்க முடியாத நாளை முழுக்க முழுக்க பாலிசியில் உள்ள நிபந்தனைகளின் கீழ் நிறுவனம் இன்சூர் செய்கிறது.

திருமணம் ரத்தான செலவை மட்டுமின்றி, திருமணத்தில் ஏற்படக்கூடிய விபத்துகளுக்கும் இந்த பாலிசி கவரேஜ் வழங்குகிறது. அதாவது, திருமண நிகழ்வு ரத்தானாலும் அல்லது தள்ளி வைக்கப்பட்டாலும் அதனால் ஏற்படக்கூடிய செலவுகளை இந்த பாலிசி ஏற்றுக் கொள்கிறது. பருவமழை தவிர ஏற்படக்கூடிய பிற மழை பொழிவுகள், புயல், ஆலங்கட்டி மழை, சுனாமி போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்களுக்கு எதிராக பாதுகாப்பு வழங்குகிறது.

மேலும் தீ விபத்து, பூகம்பம், வெள்ளம், புயல் காரணமாக திருமண நிகழ்வு தடைப்பட்டாலோ, கலவரங்கள், ஊரடங்கு காரணமாக திருமண நிகழ்வு நடைபெறவிருந்த இடம் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டாலோ, மணமகன், மணமகள் மற்றும் அவர்களின் ரத்த சொந்தங்களுக்கு இறப்பு நேர்ந்தாலோ போன்ற அனைத்திற்கும் இந்த பாலிசியின் கீழ் காப்பீடு வழங்கப்படுகிறது. கஸ்டமரின் தேவையை பொருத்து பாலிசி தனிப்பயனாக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட திருமண நிகழ்வுக்கு ஆன மொத்த செலவையும் இந்த பாலிசி மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

இந்த பாலிசி திருமணத்திற்கு மட்டுமே பொருந்தும். எனினும் மணமகன், மணமகள், அவர்களது குடும்பம், சொந்த பந்தங்கள், நண்பர்கள் இடையே சண்டைகள் காரணமாக திருமண நிகழ்விற்கு தடை ஏற்பட்டாலோ, சட்ட ரீதியான வழக்குகள் காரணமாக திருமணம் நின்றுபோனாலோ காப்பீடு பெற முடியாது. இதைத் தவிர திருமணத்திற்கான செலவுகளை சமாளிக்க முடியாத காரணத்தினால் திருமணம் நின்று போனாலும் இந்த பாலிசி மூலமாக கவரேஜ் பெற முடியாது.

Chella

Next Post

இந்த நாட்டில் விபச்சாரம் குற்றமில்லை!… உரிமம் பெறுவது அவசியம்!… சட்டங்களை இயற்றிய அரசு!

Fri Jan 19 , 2024
பழங்காலத்திலிருந்தே விபச்சாரம் ஒரு தொழிலாக இருந்து வருகிறது. மற்ற வேலைகளைப் போலவே, இதுவும் பணம் சம்பாதிக்கப் பயன்படுகிறது. இந்தியாவில் விபச்சாரமே நடக்காது என்று இல்லை. இந்தியாவிலும் விபச்சாரங்கள் அதிகம். ஆனால் இது வரை இந்தியாவில் சட்ட அந்தஸ்து பெறவில்லை. உலகில் பல நாடுகள் விபச்சாரத்திற்கு சட்ட அந்தஸ்தை வழங்கியுள்ளன. எனவே இது பல நாடுகளில் சட்டவிரோதமானது. குறிப்பாக முஸ்லிம் நாடுகளில் சட்டங்கள் மிகவும் கடுமையாக இருக்கும். அந்த நாடுகளிலும் இந்தத் […]

You May Like