ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் வழங்கும் நடைமுறையை பிறமாநில அரசுகள் நடைமுறைப்படுத்தினால், அதை பொறுத்து தமிழ்நாட்டிலும் செயல்படுத்தப்படும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா சென்னை எழும்பூரில் நடைபெற்றது. அச்சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்திற்கு, விருதுக்கான சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுக்க விரைவில் குழு அமைக்கப்படும். திரையரங்குகளில் பொங்கலுக்கு சிறப்புக் காட்சிகளுக்கு கோரி விண்ணப்பித்தால், முதலமைச்சர் முக.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி அனுமதி வழங்கப்படும்.

மேலும், ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் வழங்கும் நடைமுறையை பிற மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தினால், அதை பொறுத்து தமிழ்நாட்டிலும் செயல்படுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.