fbpx

சூப்பரோ சூப்பர்..!! கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.6,000..!! இவர்களுக்கு கிடைக்காது..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், கர்ப்பிணி பெண்கள் தேவையான அனைத்து வித ஊட்டச்சத்துக்களையும் பெற்று நிம்மதியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் தான் பிறக்கப் போகும் குழந்தையும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பிறக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றன. இதற்காக மத்திய அரசு பிரதான் மந்திரி மாத்ருத்வா வந்தனா யோஜனா என்ற திட்டத்தை கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தொடங்கியது. இதன் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு 4 தவணைகளில் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பதிவு செய்ய ஆரம்ப சுகாதார நிலையத்தை நாட வேண்டும்.

முழுவதுமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பிரசவம் பார்த்துக் கொள்ளும் பெண்களுக்கு முழு தொகையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு சுகாதார மையத்தில் தங்களின் கர்ப்பத்தை பதிவு செய்து குறிப்பிட்ட நேரத்தில் சுகாதார மையத்தில் கூறியது போல தடுப்பூசி செலுத்த வேண்டும். வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் எண்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இவர்களுக்கு தான் இந்த திட்டத்தின் மூலமாக தொகை வழங்கப்படும். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் இந்த திட்டத்தின் பலன்களை பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

கல்லூரியில் கர்ப்பத்தை கலைக்க முயன்ற மாணவி..!! கதவை உடைத்து பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி..!!

Sun Apr 16 , 2023
ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் படிக்கும் மாணவி கருச்சிதைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், ”நெல்லூர் மாவட்டம் மரிபாடு மண்டலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் நெல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வந்தார். இம்மாதம் 11ஆம் தேதி அனைத்து மாணவர்களும் கல்லூரி வளாகத்தில் […]

You May Like