கல்வித்தரத்தை உயர்த்த ஒரே நேரத்தில் 1,70,461 ஆசிரியர்களை பணியமர்த்த உள்ளதாக, பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளார். நிதி ஆயோக் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, இந்தியா முழுவதும் உள்ள 20 மிகப்பெரிய மாநிலங்களில் கல்வித்தரத்தில் 19-வது இடத்தில் பீகார் உள்ளது.
இந்நிலையில், முதன்மை ஆசிரியர்கள் 79,943 பேரும், நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் 32,916 பேரும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 57,602 பேர் என மொத்தம் 1,70,461 ஆசிரியர்களை பணியமர்த்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த காலிபணியிடங்களுக்கு பீகார் மாநிலத்தில் இருக்கும் தகுதியுடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் bpsc.bihar.gov.in என்ற இணையத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.