தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. இவர் சென்னை-28, கோவா, மாநாடு, மங்காத்தா போன்ற வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தனது அடுத்த படத்தை விஜய்யை வைத்து இயக்க உள்ளார். இதன் அப்டேட் சமீபத்தில் வெளியாகி விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
”தளபதி 68” படத்திற்கு இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் – யுவன் காம்போ பல ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தில் மீண்டும் இணைகிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய வெங்கட் பிரபு, ’லியோ படம் வெளியான பிறகே தளபதி 68 படத்தின் அப்டேட் வெளியாகும்’ என்று கூறினார். ’தளபதி 68’ அப்டேட் வெளியானபோது நடிகர் அஜித் குமார்தான் முதலில் வாழ்த்து கூறியதாக வெங்கட் பிரபு தெரிவித்தார்.
’தளபதி 68’ படத்தில் சூப்பர் ஸ்டார் விஜய் என்ற டைட்டில் வருமா? என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, “தளபதி விஜய் தளபதிதான். தளபதி விஜய்யைதான் அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள்” என பதிலளித்து அந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார் வெங்கட் பிரபு.