fbpx

ரெடி…! 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித்தேர்வு…! இன்று முதல் விண்ணப்பம் தொடக்கம்…! முழு விவரம் இதோ…

இது குறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; 8-ம் வகுப்பு தனித்தேர்வு எழுதும் மாணவர்கள் இன்று முதல் வரும் 28 ம் தேதி விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 7-ம் தேதி முதல், 11-ம் தேதி வரை தனித்தேர்வர்களுக்கு, பொதுத்தேர்வு நடைபெறும். இத்தேர்வில் ஆகஸ்ட் 1-ம் தேதி அன்று, 12.5 வயது பூர்த்தி அடைந்தவர் பங்கேற்கலாம். மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

வரும், 28ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது.தேர்வு கட்டணமாக, ரூ125 செலுத்த வேண்டும், பதிவு கட்டணமாக 70 ரூபாய் சேர்த்து, 195 ரூபாய் செலுத்த வேண்டும். இத்தேர்வுக்கு ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

குட் நியூஸ்...! மின் வடிவில் இ-சாதிச்சான்றிதழ்‌...! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு...! இவர்களுக்கு மட்டுமே...!

Tue Jun 20 , 2023
தமிழக அரசால்‌ நரிக்குறவர்‌, குருவிக்கான்‌ சமுதாயத்தினர்‌ அனைத்து அரசியலமைப்பு பாதுகாப்பு மற்றும்‌ நலத்திட்டங்களை பெற தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பழங்குடியினர்‌ மக்களுக்கு சாதிச்சான்றிதழ்‌ வழங்க அதிகாரம்‌ வழங்கப்பட்டுள்ள வருவாய்‌ கோட்டாட்சியர்கள்‌ / சார்‌ ஆட்சியர்கள்‌, நரிக்குறவன்‌, குருவிக்காரன்‌ சமுதாய மக்களுக்கு பழங்குடியினர்‌ சாதிச்சான்று வழங்குவதற்கு எதுவாகவழிகாட்டி நெறிமுறைகள்‌ வழங்கப்பட்டுள்ள நிலையில்‌ தற்போது மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ பிரிவில்‌ இருந்து பழங்குடியினர்‌ பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளநரிக்குறவன்‌, குருவிக்காரன்‌ சமுதாய மக்களுக்கு பழங்குடியினர்‌ சாதிச்சான்றிதழை அரசால்‌ […]

You May Like