தமிழ் திரைப்பட துணை நடிகர் பிரபு புற்றுநோயால் காலமானார்.
சினிமாவில் சாதிக்கவேண்டும் என சென்னைக்கு வந்து வாய்ப்பு கிடைத்து சாதிப்பவர்களே அதிகம் . அப்படி சினிமாவில் பல படங்களில் சின்ன ரோல்களில் மட்டும் நடித்து இருப்பவர் பிரபு. தமிழ் திரைப்பட துணை நடிகர் பிரபு புற்றுநோயால் மரணமடைந்தார். இவர், நடிகர் தனுஷின் படிக்காதவன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். இதனிடையே, அண்மையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருந்தவருக்கு இசையமைப்பாளர் டி.இமான் மருத்துவ உதவிகள் செய்து வந்தார். இந்நிலையில், இன்று பிரபு உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது உடலை இசையமைப்பாளர் இமானே தகனம் செய்தார்.