நாட்டின் உச்சபச்ச நீதி அமைப்பாக உள்ள உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு தேச முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் விசாரணையை நேரலையில் ஒளிபரப்பும் நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
உச்சநீதிமன்ற நடைமுறைகளை 2018ம் ஆண்டு நேரலையில் ஒளிபரப்ப அனுமதி தந்து வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பானது 4 ஆண்டுகள் கழித்து இன்று அமலுக்கு வந்துள்ளது.
இன்று முதல் நேரலையில் வழக்குகளை ஒளிபரப்பும் வழக்கத்தை தொடங்கலாம் என்ற முடிவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையில் நடைபெற்ற நீதிபதி கூட்டத்தில் எடுக்கப்பட்டது. முதல் நாளான இன்று பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு, மகாராஷ்டிரா சிவசேனா கட்சி அரசியல் வழக்கு, டெல்லி அரசு மற்றும் மத்திய அரசு அதிகாரப் போட்டி போன்ற வாக்குகள் நேரலையில் ஒளிபரப்பப்பட உள்ளது. முதற்கட்டமாக வழக்கு விசாரணைகள் ஒளிபரப்பானது யூடியூப்களில் பதிவேற்றம் செய்யப்படும். இத உச்சநீதிமன்றம் உருவாக்கப்பட்ட யூடியூப் சேனலில் வெளியிடப்படும்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை 2018ம் ஆண்டு செப்டம்பர் 27ல் உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் அமர்வு நேரலையில் ஒளிபரபபலாம் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. எனவே பாலியல் குற்றங்கள், திருமண தகராறுகள் போன்ற வழக்குகளைத் தவிற முக்கியத்துவம் பெற்ற வழக்குகளை உச்சநீதிமன்றம் நேரலையில் ஒளிபரப்ப உள்ளது.
குஜராத், ஒடிசா, பீகார் , மத்திய பிரதேசம், கர்நாடகா , ஜார்கண்ட் , ஆகிய மாநிலங்களின் உயர் நீதிமன்றங்கள் தங்களின் வழக்கு விசாரைணை நேரலையில் ஒளிபரப்பு செய்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.