தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக சூர்யா வலம் வருகிறார். சூர்யா கடைசியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்திருந்தார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்தது. பாபி தியோல், திஷா படானி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான கங்குவா படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. 350 கோடி என்ற பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.106 கோடி மட்டுமே வசூலித்து மிகப்பெரிய ஃபிளாப் படமாக மாறியது.
எனினும் சூர்யா தற்போது தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் ஜெயராஜ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
ரெட்ரோ படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்.ஜே பாலாஜி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். மேலும் வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் சூர்யா நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சூர்யாவின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி ஒரு சூப்பர் ஹீரோ படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய சினிமாவில் மிகக் குறைவான சூப்பர் ஹீரோ படங்கள் மட்டுமே உள்ளன. மலையாள சினிமாவின் சிறந்த சூப்பர் ஹீரோ படங்களில் ஒன்று மின்னல் முரளி. இந்த படத்தை பிரபல நடிகரான பாசில் ஜோசப் இயக்கியுள்ளார். இந்த நிலையில் பாசில் ஜோசப்புடன் சூர்யா கை கோர்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படமும் ஒரு சூப்பர் ஹீரோ படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : தளபதி விஜய் கட்சியில் இணையும் பிக் பாஸ் பிரபலம்? கோயிலில் தரிசனம் செய்து விட்டு, பிரபலம் அளித்த பேட்டி..