fbpx

வணங்கான்’ படத்தில் இருந்து சூர்யா விலகல் – இயக்குநர் பாலா பரபரப்பு அறிக்கை

வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகியுள்ளார் என இயக்குனர் பாலா தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர் தனது அறிக்கையில்; என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ’வணங்கான்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. என் மீதும், இந்த கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும், மதிப்பும், நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்து விடக்கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.

எனவே வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவு எடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம் தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது. நந்தாவில் பார்த்த சூர்யா, பிதாமகனில் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி வணங்காண் படப்பணிகள் தொடரும். இவ்வாறு இயக்குனர் பாலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Vignesh

Next Post

"கேட்ச்சை தவறவிட்ட கேஎல் ராகுல்" கடைசி விக்கெட்டுக்கு 51 ரன்களை அடித்த பங்களாதேஷ்!!! படுதோல்வி அடைந்த இந்திய அணி...

Mon Dec 5 , 2022
இந்தியா – பங்களாதேஷ் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா,ஷிகர் தவான் களமிறங்கினர். தொடக்கத்தில் தவான் 7 ரன்களிலும், ரோகித் சர்மா 27 ரன்களிலும் வெளியேறினர். விராட் கோலி 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த வீரர்களில் கே.எல்.ராகுல் மட்டும் […]

You May Like