fbpx

நவம்பர் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் சூர்யாவின் கங்குவா..! தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ரஜினியின் “அண்னாத்த” படத்தின் தோல்வியை அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படம் “கங்குவா”. இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றதால், சூர்யா – சிவா கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த படத்தை, தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன், அக்டோபர் 10ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தது. அதற்காக, இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. ஆனால் ரஜினியின் வேட்டையன் திரைப்படம்அதே தேதியில் வெளியாகி இருப்பதால் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டது. படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்திருந்த நிலையில் தற்போது நவம்பர் 14 ஆம் தேதி சூர்யாவின் கங்குவா படம் ரிலீஸ் ஆகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

வரலாற்று கதையம்சம் கொண்ட பேண்டஸி திரைப்படமாக உருவாகியுள்ளது “கங்குவா”. இந்த படத்தில் வில்லனாக, அனிமல் படத்தின் மூலம் புகழ்பெற்ற இந்தி நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். மேலும் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார். உலகளவில் 10 மொழிகளில் ரிலீஸ் இந்த படத்தில் நடிகர் கார்த்தியும் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார்.

Read More: மைனர் பொண்ணு..!! பாய்ந்தது போக்சோ..!! நடன இயக்குனர் ஜானி இடை நீக்கம்..!! வெளியான அதிரடி அறிவிப்பு..!!

English Summary

Suriya’s Kanguva to release on November 14..! Production company official announcement..!

Kathir

Next Post

28 மாணவிகள்..!! கை, கால்களை கட்டிப் போட்டு பலாத்காரம் செய்த கேமராமேன்..!! 2-வது மனைவி உடந்தை..!! அதிரும் ஆந்திரா..!!

Thu Sep 19 , 2024
28 women were raped by Sasikkumar, it came to light during the investigation. Sasikumar's second wife Panisree has helped in this.

You May Like