fbpx

“கூகுளை பார்த்து குண்டு தயாரிப்பு” சரணடைந்தவரே உண்மையான குற்றவாளி: கேரள காவல்துறை..!

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் நடைபெற்ற வழிபாட்டு கூட்டத்தில் வெடிகுண்டு வெடித்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. களமச்சேரி பகுதியில் 2000 பேர் கலந்துகொண்ட ஜெப கூட்டம் நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த நிலையில் காலை 9.45 மணிக்கு மூன்று முறை குண்டு வெடிப்பு நடந்துள்ளது. குண்டு வெடிப்பை அடுத்து, இடம் முழுவதும் தீ பற்றி எறிந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பை அடுத்து அங்கிருந்த மக்கள் உடனடியாக வெளியேறியுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு காரணமாக பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பு அதிகாரிகளும் விசாரணையை துவங்கியுள்ளனர்.

வெடிகுண்டு வைத்ததாகக் கூறி கொச்சியை சேர்ந்த டோமினிக் மார்ட்டின் என்பவர் திருச்சூர் கொடகரா காவல் நிலையத்தில் தாமாக வந்து சரணடைந்தார். கொடகரா போலீசார் அந்த நபரை கொச்சியில் இருந்து உயர் அதிகாரிகள் முன்னிலையில் விரிவான விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் போலீசில் சரணடைந்த கொச்சியை சேர்ந்த டோமினிக் மார்ட்டின் தான் களமச்சேரி குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணம் என்று கேரளா காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் நடந்த விசரணைக்கு பிறகு காவல்துறை இதை உறுதி செய்துள்ளது.

போலீசில் சரணடைவதற்கு முன் மார்ட்டின், குண்டுவைத்தது நான் தான் என்று விடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “என் பெயர் மார்ட்டின், பிரார்த்தனை கூட்டத்தில் வெடிகுண்டு வெடிக்கச் செய்ததற்கு நான் பொறுப்பேற்கிறேன். நான் ஏன் இந்த செயலை செய்தேன் என்பதை விளக்கவே இந்த வீடியோ பதிவேற்றம் செய்கிறேன். இந்த அமைப்பின் போதனைகள் நாட்டுக்கு எதிரானது என்பதை நான் உணர்ந்தேன். தேசவிரோத செயல்களை கைவிட வேண்டும் என வலியுறுத்தினேன். ஆனால் அவர்கள் மாறவில்லை. தொடர்ந்து எனக்கு பிடிக்காத போதனைகளை போதித்து வந்தனர். இதை நான் எதிர்க்கிறேன். டிபன் பாக்ஸில் குண்டுகளை மறைத்து வைத்து வெடிக்க செய்தேன்” என்று அந்த விடியோவில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் டோமினிக் மார்ட்டினின் பின்னணி தொடர்பாக கேரளா காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கூகுளை பார்த்து குண்டு தயாரிப்பது குறித்து கற்றுக் கொண்டதாக டொமினிக் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து கேரளா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Kathir

Next Post

கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த மனைவி…! கள்ளக்காதலால் ஏற்பட்ட விபரீதம்..!

Sun Oct 29 , 2023
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த கனகம்மாசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன் இவரது மனைவி சுசிலா வயது 34. இந்தக் தம்பதிக்கு, குமரேசன் (15), கவுசிக் (13) என்ற இரு மகன்கள் உள்ளனர். கஜேந்திரன் மற்றும் சுசிலா இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணாமாக 10 ஆண்டுகளுக்கு முன்பு கனவனை பிரிந்து மகன்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார் சுசிலா. திருத்தணி காந்திரோடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்த சுசிலா […]

You May Like