T20 ranking: ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர்கள் சூர்யகுமார் யாதவ், ஜெய்ஸ்வால், கெய்க்வால் டாப் 10ல் இடம்பிடித்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
அனைத்து வகையான கிரிக்கெட்டிற்கும் ஐசிசி அவ்வப்போது வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த வகையில், சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார். இந்த செய்தியில் அவரது சாதனை மற்றும் டி20 பேட்ஸ்மேன்களுக்கான சமீபத்திய ஐசிசி தரவரிசை பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அந்தவகையில், டி20 தரவரிசை பட்டியலில் டாப் 10ல் இடம்பிடித்த வீரர்கள்: முதலிடத்தில் டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா) – 844 புள்ளிகள், 797 புள்ளிகளுடன் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 2வது இடத்தில் உள்ளார். 797 புள்ளிகளுடன் இங்கிலாந்து வீரர் பில் சால்ட் 3வது இடத்திலும், 755 புள்ளிகளுடன் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 4வது இடத்திலும், முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்) – 746 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.
குறிப்பாக, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 இடங்கள் முன்னேறி 6வது இடத்திற்கு வந்துள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் 1 இடம் பின்னுக்குத் தள்ளப்பட்டு 8வது இடத்திற்கு சென்றுள்ளார். விராட் கோலி இந்த பட்டியலில் 33வது இடத்தில் உள்ளார். அதாவது, யஷஸ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா) – 743 புள்ளிகள், ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து) – 716 புள்ளிகள், ருதுராஜ் கெய்க்வாட் (இந்தியா) – 684 புள்ளிகள், பிரண்டன் கிங் (வெஸ்ட் இண்டீஸ்) – 656 புள்ளிகள் ஜான்சன் சார்லஸ் (வெஸ்ட் இண்டீஸ்) – 655 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளனர். அடுத்த ஐசிசி T20 பேட்ஸ்மேன் தரவரிசை ஜூலை 27, 2024 அன்று வெளியிடப்படும், அதாவது இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான T20 தொடரின் முதல் போட்டிக்கு ஒரு நாள் முன்பு வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: அதிர்ச்சி…! ஷாக் அடிக்கும் துவரம் பருப்பு விலை…! 1 கிலோ எவ்வளவு தெரியுமா…?