fbpx

பெங்களூரை துவம்சம் செய்த சூர்யகுமார் யாதவின் வெறியாட்டம்!… மெகா சேசிங் சாதனை!… டாப்பில் நுழைந்த மும்பை!

சூர்யகுமார் யாதவின் அதிரடி ஆட்டம் காரணமாக பெங்களூரு அணியை வீழ்த்தி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மும்பை இந்தியன்ஸ் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 54வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. இதில், விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஃபாப் டூப்ளெசிஸ் அதிரடியாக ஆடி 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதே போன்று மற்றொரு அதிரடி வீரர் மேக்ஸ்வெல் தன் பங்கிற்கு வான வேடிக்கை காட்டி 68 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கடைசியாக வந்த தினேஷ் கார்த்திக் 18 பந்துகளில் 30 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியாக ஆர்சிபி அணி 199 ரன்கள் குவித்தது. பின்னர் கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா 7 ரன்களில் வெளியேறினார்.

இஷான் கிஷான் 42 ரன்களில் ஆட்டமிழந்ததையடுத்து, ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் நேஹல் வதேரா இருவரும் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதில், சூர்யகுமார் யாதவ் நாலா புறமும் பெங்களூரு அணியின் பந்துவீச்சை பவுண்டரியும், சிக்ஸருமாக பறக்கவிட்டார். 35 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் என 83 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். நேஹல் வதேரா 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் உள்பட 52 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி 16.3 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 200 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அதுமட்டுமின்றி, புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும், மும்பை அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்னும், 3 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் வாய்ப்பு உறுதி செய்யப்படும்.ஆனால், பெங்களூரு அணி நேற்றைய போட்டியில் தோற்றதன் மூலமாக 7ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இன்னும், 3 போட்டிகள் எஞ்சிய நிலையில், 3 போட்டியிலும் ஜெயித்தால் கூட 16 புள்ளிகள் மட்டுமே பெறும். ஆனாலும் பிளே ஆஃப் வாய்ப்பு ரொம்பவே குறைவு தான். முதல் 4 இடங்களில் உள்ள மற்ற அணிகளின் புள்ளிப்பட்டியல் மற்றும் ரன்ரேட் அடிப்படையில் ஆர்சிபியின் பிளே ஆஃப் வாய்ப்பு அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 200 ரன் இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து வெற்றி பெற்றதன் மூலம் மும்பை அணி இரண்டு புதிய சாதனைகளை படத்துள்ளது. 1. ஒரு ஐபிஎல் சீசனில் 200+ ரன்களை அதிக முறை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற புதிய சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக 2014ம் ஆண்டு பஞ்சாப் அணி 2 முறை 200+ ரன்களையும், 2014ம் ஆண்டு சென்னை அணி 2 முறை 200+ ரன்களையும் சேசிங் செய்துள்ளது. ஆனால் மும்பை அணி இந்த சீசனில் இதுவரை 3 முறை (பஞ்சாப், ராஜஸ்தான், பெங்களூரு) 200+ ரன்களை சேசிங் செய்து புதிய சாதனையை படைத்துள்ளது.

200+ ரன்களை சேசிங் செய்து வெற்றி பெறும் போது அதிக பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற்ற அணி என்ற புதிய சாதனையும் மும்பை படைத்துள்ளது. மும்பை அணி நேற்றைய ஆட்டத்தில் 21 பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற்றது. இதற்கு முன்னதாக 2017ம் ஆண்டு டெல்லி அணி குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 15 பந்துகளை மீதம் வைத்தும், 2010ம் ஆண்டு பஞ்சாப் அணி கொல்கத்தாவிற்கு எதிரான ஆட்டத்தில் 10 பந்துகளை மீதம் வைத்தும் வெற்றி பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

+2, ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!... மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்!

Thu May 11 , 2023
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) நிறுவனம் மூலம் 374 கற்றல் அல்லாத பணி இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. கண்காணிப்பு பொறியாளர், தயாரிப்பு அதிகாரி, தொழில்நுட்ப அதிகாரி, உதவி பொறியாளர், உதவியாளர், மூத்த கணக்காளர், ஜூனியர் கணக்காளர், விற்பனை நிர்வாகி, உதவி அங்காடி அதிகாரி, தொழில்முறை உதவியாளர், தொழில்நுட்பவியலாளர், கள ஆய்வாளர், வரவேற்பாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், எலெக்ட்ரீஷியன் உள்பட பல்வேறு பணி இடங்கள் […]

You May Like