fbpx

ஜோதிமணி உள்ளிட்ட 4 எம்.பிக்கள் இடைநீக்கம்.. சபாநாயகர் உத்தரவு…

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்க்ள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.. இதனால் மக்களவை, மாநிலங்களவை என 2 அவைகளுமே கடந்த வாரம் முழுவதுமே முடங்கின.. இந்நிலையில் இன்றும் மக்களவை கூடிய போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்திய அரசை விமர்சித்து பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.. இதனால் அவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது..

பதாகைகளை ஏந்தி வருவது, அவை தலைவரின் இருக்கையை முற்றுகையிடுவது, தொடர் முழுக்கங்களை எழுப்புவது போன்ற செயல்களை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.. பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபடுவது, அவையின் விதிமுறைகளை மீறும் செயல் என்று எச்சரித்தார்..

இந்நிலையில் அவை மீண்டும் கூடிய போதும் தொடர் அமளியில் ஈடுபட்ட நிலையில் தமிழகத்தை சேர்ந்த மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட 4 பேரை இடைநீக்கம் செய்ய வேண்டும் அரசு தீர்மானம் கொடுக்கப்பட்டது.. இதை தொடர்ந்து மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட 4 காங்கிரஸ் எம்.பிக்களை இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.. நாடாளுமன்ற நடவடிக்கைகளை நடத்த விடமால அமளியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அவை ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. எனவே ஆகஸ்ட் 11 வரை நடைபெறும் கூட்டத்தொடரில் இந்த 4 காங்கிரஸ் எம்.பிக்களும் கலந்து கொள்ள முடியாது என்றும் உத்தரவிட்டுள்ளார்..

Maha

Next Post

”அடுத்த தேர்தல் எப்போது வரும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்”..! - முன்னாள் அமைச்சர் தங்கமணி

Mon Jul 25 , 2022
அடுத்த தேர்தல் எப்போது வரும் என அரசு ஊழியர் முதல் பாமர மக்கள் வரை அனைவரும் காத்து கொண்டிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மின் கட்டணம், சொத்து வரி, விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட திமுக அரசின் செயலை கண்டித்து நாமக்கல் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய தங்கமணி, ”தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு இல்லை என்பதற்கு […]

You May Like