fbpx

ஸ்வாதி மாலிவால் தாக்குதல் வீடியோ இணையத்தில் வைரல்!

அர்விந்த் கேஜ்ரிவால் இல்லத்தில் ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிறையிலிருந்து வெளியே வந்துள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு, கடந்த திங்கள்கிழமை ஆம்ஆத்மி எம்பி ஸ்வாதி மலிவால் சென்றார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபாவ் குமார், சுவாதி மாலிவாலை தாக்கியதாக புகார் எழுந்தது. கெஜ்ரிவாலுக்கு நெருக்கமானவரும் நேரடி உதவியாளருமான பிபாவ் இச்செயலில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சுவாதி மாலிவால் டெல்லி காவல் துறையினரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து, டெல்லி போலீஸார் அவரை,நே ற்று இரவு 11 மணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, இன்று அதிகாலை 3.15 மணிக்கு மருத்துவமனையிலிருந்து திரும்பினர். மருத்துவமனையில் அவருக்கு எக்ஸ்-ரே மற்றும் சி. டி ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது டெல்லி மகளிர் ஆணைய உறுப்பினர் வந்தனா சிங்கும் மாலிவாலுடன் இருந்தார்.

அதைத் தொடர்ந்து பிபவ்குமார் மீது டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் பிபவ்குமார் அங்கு இல்லை. இதையடுத்து அவரை தேடும் பணியை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி போலீஸார் 10 குழுக்களை அமைத்துள்ளனர். அவற்றில் 4 குழு பிபவ்குமார் சல்லடை போட்டு தேடி வருகிறது.

இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் ஸ்வாதி மலிவால் ஷோபாவில் அமர்ந்திருப்பதும், அவரை சுற்றிலும் ஆண் பணியாளர்கள் இருப்பதும் பதிவாகி உள்ளன. மேலும், பிபவ் குமார், ஸ்வாதி மலிவாலை வெளியே போகும்படி கூறுவதும், அதற்கு, “நான் உங்கள் அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டேன். போலீஸாருக்கு போன் செய்துள்ளேன்.

நான் இங்கிருந்து போகமாட்டேன். உங்களுக்கு பாடம் கற்பிப்பேன்” என ஸ்வாதி மலிவால் கூறுவதும் கேட்கிறது. அதனைத்தொடர்ந்து, அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் அந்த காட்சிகள் இந்த வீடியோவில் இல்லை. ஆனால், ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்ட வீடியோ என இது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

‘நடந்தது இது தான்!’ வாக்கு மூலம் அளித்த சுவாதி மாலிவால்.. கெஜ்ரிவால் தனி செயலாளர் மீது வழக்கு பதிவு!

Next Post

தமிழகமே...! வீட்டிற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம்...! அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய தகவல்...!

Fri May 17 , 2024
வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்; சமூக வலைத்தளம் மற்றும் காட்சி ஊடகத்தில் வெளிவரும் 100 யூனிட் இலவச மின்சாரம் குறித்த செய்தியானது உண்மை நிலைக்கு மாறானது. தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை […]

You May Like