fbpx

தித்திக்கும் சீதாப்பழம்!… சர்க்கரை நோயாளிகளும் இதை சாப்பிடலாம்!… மருத்துவ குணங்கள் இதோ!

அதிக தித்திப்பாக இருக்கும் சீதாப்பழத்தை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம். அந்தளவிற்கு ஆரோக்கிய நன்மைகளை கொண்ட இந்த சீதாப்பழத்தின் மருத்துவ குணங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சீதாப்பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் அதிகளவில் உள்ளன. அதன்படி, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்புச்சத்து, பொட்டாசியம், தாமிரம், மக்னீசியம் ஆகியவை சீதா பழத்தில் மிகுந்து காணப்படுகின்றன. இந்த பழம் நம்முடைய எலும்புகளை வலுவாக்கும். வீக்கம், மாதவிடாய் முன் நோய்க்குறி (pms) போன்ற நோய்களை குணமடைய செய்ய உதவுகிறது. நீரழிவு நோய் வந்தவர்கள் பழங்களை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். ஏனென்றால் பருவகால பழங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சட்டென ஏற்றிவிடும். ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் வைட்டமின் பி6 சீதா பழத்தில் உள்ளது.

சீதாப் பழத்தில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகள் சீதாப்பழத்தை சாப்பிட வேண்டும். ஏனெனில் இது அவர்களின் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்க உதவுகிறது. நார்ச்சத்து ஏராளமாக உள்ள சீதாப் பழத்தை எடை குறைக்க நினைப்பவர்கள் உண்ணலாம். மேலும் சீதாப்பழம் சாப்பிடுவதால், மன நலம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. கண் பார்வை மேம்படுகிறது. ரத்தத்தில் ஹுமோகுளோபின் அளவை அதிகரிக்கும். புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. அசிட்டிட்டிக்கு நல்லது. செரிமானத்தை மேம்படுத்துகிறது. அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. சருமத்தை மென்மையாகவும், பொலிவாகவும் மாற்ற உதவுகிறது.

Kokila

Next Post

இன்னும் ஆதாருடன் பான் எண்ணை இணைக்கவில்லையா..? கவலை வேண்டாம்.. இந்த தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு.. .

Wed Mar 29 , 2023
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது உள்ளிட்ட சில சேவைகளைப் பெறுவதற்கு, பான் கார்டுடன் ஆதார் அட்டையை இந்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2022 என்று அறிவிக்கப்பட்டது.. இருப்பினும், பான் கார்டு – ஆதார் அட்டை இணைப்புக்கான கால அவகாசம் மார்ச் 31, 2023 வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு பான் எண்ணுடன் ஆதாரை இணைக்கத் தவறியவர்கள், […]

You May Like