fbpx

மக்களே இனிப்பான செய்தி..!! 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு..!! மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!

உலகப் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் திருச்சி மாவட்டத்தில் உள்ளது. இந்த திருக்கோவிலின் சித்திரை தேர் திருவிழாவானது நாளை நடைபெற உள்ளது. அதேபோல ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழாவும் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த 2 திருவிழாக்களிலும் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

பக்தர்களுடைய நலனை கருத்தில் கொண்டு திருச்சி மாவட்டத்திற்கு நாளை மற்றும் நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த நாளில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் விடுமுறை என்றும் தேர்வு நடைபெற உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளுக்கு பதிலாக ஏப்ரல் 29 மற்றும் மே 13ஆம் தேதி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

திருப்பதி காளஹஸ்தி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு..!! செல்போன் எடுத்துச் சென்றால் ரூ.5,000 அபராதம்..!!

Mon Apr 17 , 2023
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தியில் புகழ்பெற்ற சிவன் கோவில் உள்ளது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 252-வது தேவாரத்தலம் ஆகும். இது ராகு, கேது தலம் என்பதால் கோவிலை வலம் வருவதும் எதிர் வலமாகவே சுற்றி வர வேண்டும். இந்த கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து […]

You May Like