fbpx

தொடர்ந்து 46 மணி நேரம் ஓடி ஹைட்ரஜன் ரயில் கின்னஸ் ரிக்கார்ட்!

உலகளவில் ரயில்களில் பயணம் செய்வதில் தான் மக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ரயில்களின் தேவைகள் அதிகரித்து வருகிறது. அதேசமயம் எல்லா இடங்களில் ஒரே மாதியான ரயில்கள் இயக்கப்படுவதில்லை. குறிப்பாக ஃபுனிகுலர்கள் மற்றும் ரேக் ரயில்கள் செங்குத்தான சரிவுகளில் பயணிக்க தனித்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஸ்டாட்லர் நிறுவனம் உருவாக்கிய ஹைட்ரஜன் எரிபொருள் பயணிகள் ரெயில் 2 நாட்கள் நிற்காமல் பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ஒரு முழு ஹைட்ரஜன் டேங்க் மூலம் 2,803 கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளது. தனது ஹைட்ரஜன் எரிபொருள் ரெயிலை முதன் முதலில் பெர்லினில் நடைபெற்ற வர்த்தக கண்காட்சியில் ஸ்டாட்லர் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதேபோல், சீனாவும் முதல் உள்நாட்டு ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் 160 கிமீ வேகத்தில் இயக்கி முழு ஓட்ட சோதனையை நிறைவு செய்தது. வடகிழக்கு சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள சாங்சுனில் உள்ள CRRC Changchun Railway Vehicles Co Ltd நிறுவனத்தால் இந்த ரயில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Baskar

Next Post

Election 2024: தமிழகத்தில் 874 ஆண்கள், 76 பெண்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டி...!

Sun Mar 31 , 2024
நடக்கவுள்ள 18வது மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 950 பேர் களம் காண உள்ளனர். 17-வது மக்களவையின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய மக்களவையை அமைப்பதற்கு தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. அரசியலமைப்பு சட்ட விதிகளைக் கருத்தில் கொண்டு, 18-வது மக்களவைக்கான தேர்தல்களை சுதந்திரமான முறையில் நடத்த விரிவான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் […]

You May Like