புதிய கோவிட் மாறுபாடு EG.5 மாறுபாடு அறிகுறிகள் பாசிட்டிவ் சோதனைக்கு ஒருவாரத்திற்கு முன்பே தோன்றும் என்று அறிக்கையில் தெரியவந்துள்ளது.
கொரோனாவில் இருந்து உலகம் தற்போது மீண்டுள்ள நிலையில், கொரோனா வைரஸின் புதிய வகை மாறுபாடான ஓமிக்ரானின் துணை மாறுபாடு ஈஜி.5.1 என்று அழைக்கப்படும் எரிஸ் (ERIS) வைரஸ் ஆனது அமெரிக்கா, சீனா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.இந்த நிலையில், பல்வேறு நாடுகளில் புதிய வகை கொரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளதால், மாநிலங்கள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், புதிய கோவிட் மாறுபாடு EG.5 உலகின் பல்வேறு பகுதிகளில் வேகமாகப் பரவி வருகிறது, மேலும் நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிப்பதில் திரிபு நன்றாக இருந்தாலும், அறிகுறிகள் லேசானதாகவே இருக்கும், மேலும் இது குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், புதிய கோவிட் மாறுபாடு EG.5 மாறுபாடு அறிகுறிகள் பாசிட்டிவ் சோதனைக்கு ஒருவாரத்திற்கு முன்பே தோன்றும் என்று அறிக்கையில் தெரியவந்துள்ளது.
கோவிட்-19 வைரஸால் ஒரு நபர் பாதிக்கப்படும்போது, குறிப்பிடத்தக்க அறிகுறிகளைத் தூண்டுவதற்கு, அந்த வைரஸ் உடலினுள் பெருகுவதற்கு நேரம் எடுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆரம்ப சோதனையானது குறைந்த வைரஸ் சுமை காரணமாக எதிர்மறையாக வருகிறது. அதன்பின்னர் ஒவ்வொரு நாள் கடந்து செல்லும்போது அதே அளவு அதிகரிக்கிறது. எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்து சரியாகியிருந்தாலும், ஒரு வாரம் கழித்து மீண்டும் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
மேலும், இந்த வைரஸ் உடலினுள் பெருகுவதற்கு நேரம் எடுக்கும் நிகழ்வை அடைகாக்கும் காலம் என்று அழைக்கப்படுகிறது.கொரோனா வைரஸின் சமீபத்திய இரண்டு துணை வகைகளில் எரிஸ் ஒன்றாகும்.எரிஸ் மாறுபாட்டின் அறிகுறிகள் சோதனைகள் மூலம் கண்டறியப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தொடங்கும்.அறிகுறிகள் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை என்று ப்ரைமஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் எச்ஓடி-இன்டர்னல் மெடிசின் டாக்டர் அனுராக் சக்சேனா. இருமல், அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, உடல் வலி, பலவீனம் மற்றும் சோர்வு, பசியின்மை குறைதல் ஆகியவை ஏரிஸ் மாறுபாட்டின் அறிகுறிகளாகும்.