fbpx

டி.20 உலக கோப்பை : 134  என்ற இலக்கை முறியடித்து வென்றது தென்னாப்பிரிக்கா…!

டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில்137 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்கா வெற்றியை தட்டிச் சென்றது.

டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 49 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி. சூர்யகுமார் யாதவின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில்  133 ரன்கள் அடித்து 134 ரன்கள் என்ற இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்தது.

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் க்ரூப் 2ல் மிகச்சிறப்பாக ஆடிவரும் மற்றும் சமபலம் வாய்ந்த அணிகளான இந்தியா – தென்னாப்பிரிக்கா மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 2 அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டது. இந்திய அணியில் அக்ஸர் படேலுக்கு பதிலாக தீபக் ஹூடா சேர்க்கப்பட்டார். தென்னாப்பிரிக்க அணியில் ஷம்ஸிக்கு பதிலாக லுங்கி இங்கிடி சேர்க்கப்பட்டார்.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரையும் ஒரே ஓவரில் வீழ்த்திய லுங்கி இங்கிடி, தனது அடுத்தடுத்த ஓவர்களில் கோலி (12) மற்றும் ஹர்திக் பாண்டியா(2) ஆகிய இருவரையும் வீழ்த்தினார். தீபக் ஹூடாவை 2 ரன்னில் நோர்க்யா வீழ்த்த, இந்திய அணி 49 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

அதன்பின்னர் சூர்யகுமார் யாதவ் அடித்து ஆட, மந்தமாக ஆடிய தினேஷ் கார்த்திக் 15 பந்தில் 6 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். ஆனால் சூர்யகுமாருடன் 7 ஓவர்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் தினேஷ் கார்த்திக். அடித்து ஆடி 30 பந்தில் அரைசதம் அடித்த சூர்யகுமார் யாதவ், 40 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் அடித்து 19வது ஓவரில் ஆட்டமிழந்தார். சூர்யகுமாரின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 133 ரன்கள் அடித்து, 134 ரன்கள் என்ற இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்தது.

ஜிம்பாப்வேவுக்கு எதிராக 131 ரன்கள் என்ற இலக்கை அடிக்க முடியாமல் பாகிஸ்தான் தோற்றது. நெதர்லாந்துக்கு எதிராகவும் 92 ரன்கள் என்ற இலக்கை 14வது ஓவரில் தான் அடித்து பாகிஸ்தான் ஜெயித்தது. அதுவும் 4 விக்கெட்டுகளை இழந்துதான் அடித்தது.

எனவே பெர்த்தில் 134 ரன்கள் என்பது சவாலான இலக்காக இருந்தது. 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி (137 ரன்கள்) அதிரடியாக வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்க அணி. இதில் மார்க்கரம்(52ரன்கள்) மில்லர் (59 ரன்கள்) எடுத்து வெற்றியை நிலை நாட்டினர்.

Next Post

ஆற்றின் கேபிள் பாலம் இடிந்து விழுந்து பலர் படுகாயம்…!!400 பேர் தண்ணீரில் தத்தளிப்பு ?

Sun Oct 30 , 2022
மோர்பி பகுதியின் ஆற்றின் மீது கட்டப்பட்ட கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் 400க்கும் மேற்பட்டோர் தண்ணீரில் தத்தளிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குஜராத்தில் உள்ளது மோர்பி பகுதி . அங்குள்ள ஆற்றைக்கடக்க கேபில் பாலம் கட்டப்பட்டு இருந்தது. அதன் மீது பயணிகள் சென்று கொண்டிருந்தபோதே திடீரென அந்த பாலம் உடைந்து ஆற்றில் மூழ்கியது. இதில் சுமார் 400 பேர் தண்ணீரில் தத்தளிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தகவல்அறிந்து வந்த […]

You May Like