பொதுவாக அனைவரும் டேபிள் சால்ட்டை மட்டுமே பயன்படுத்துவார்கள். ஆனால் அது உடலுக்கு மிகவும் ஆபத்தானது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
அதிக உப்பை உட்கொள்வது புற்றுநோய் அபாயத்தையும் அதிகரிக்கிறது. புற்று நோய் நிபுணர்களின் கூற்றுப்படி, அதிக உப்பை உண்பதால், உடலில் புற்றுநோய் உண்டாக்கும் இரசாயனங்கள் உற்பத்தியாகிறது. இத்தகைய இரசாயனங்களால் கல்லீரல் மற்றும் குடல்களுக்கு அதிக ஆபத்து உள்ளது. புற்றுநோயை உண்டாக்கும் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் டேபிள் உப்பில் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, டேபிள் சால்ட்டைப் பயன்படுத்தும் போது புற்றுநோய்க்கான ஆபத்து அதிகரிக்கிறது.
ஒவ்வொரு கிலோ டேபிள் உப்பிலும் 33 மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இருப்பதாக இந்தோனேசியாவில் உள்ள அண்டலஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மைக்ரோபிளாஸ்டிக்ஸில் காணப்படும் மூலக்கூறுகள் புற்றுநோய் மற்றும் இதய நோய்களை ஏற்படுத்துகின்றன. இந்த ஆராய்ச்சிக்காக ஆராய்ச்சியாளர்கள் 21 பிராண்டுகளின் டேபிள் உப்பைச் சேர்த்துள்ளனர். அதில் இருக்கும் சிறிய பிளாஸ்டிக் இழைகள் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். டேபிள் உப்பில் ஃபைபர் துகள்கள் வெளிவருவதற்கு முக்கிய காரணம் கடல் நீரில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ், ஆர்கானிக் பொருட்கள் மற்றும் மணல் துகள்கள் இருப்பதுதான்.