fbpx

Tablet | ”இது சாதாரண கோடு அல்ல.. எச்சரிக்கை கோடு..!! மாத்திரை அட்டைகளில் மர்மம்..!! சிவப்பு நிற கோடு எதற்காக..?

இன்று நமக்கு உடல் நிலை சரியில்லை என்றால், முதலில் மருத்துவரிடம் செல்லாமல் நேரடியாக மருந்து கடைக்கு சென்று நமக்கு தெரிந்த மருந்தை கூறி அல்லது நமக்கு என்ன பிரச்சனை என்பதை கூறி அதற்கான மருந்தை பெற்று சாப்பிட்டு வருகிறோம். இப்படியான முறை முற்றிலும் தவறானது. ஒரு மருந்தை மருத்துவரின் அறிவுரையில்லாமல் எடுத்துக் கொள்ளகூடாது. இப்படியாக மருந்து சாப்பிட்டால் பக்க விளைவுகள் ஏற்படக்கூடும்.

இந்நிலையில், நீங்கள் இப்படியாக மருந்து கடைகளில் மாத்திரைகளை வாங்கும் போது அதன் ஸ்டிரிப்பில் ஒரு சிவப்பு நிற கோடு இருக்கும் கவனித்திருக்கிறீர்களா? இந்த கோடு எல்லா மாத்திரைகளிலும் இருக்காது. குறிப்பிட்ட சில மாத்திரைகளில் மட்டுமே இருக்கும். இந்த சிவப்பு நிற கோடுகள் குறித்து கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய சுகாதாரத்துறை சார்பில் ஒரு அறிவுரை வழங்கப்பட்டது.

இந்த சிவப்பு நிற கோடு உள்ள மாத்திரைகள் ஆண்டிபயாடிக் மாத்திரைகளில் இருக்கும். இந்த மாத்திரைகளை மருத்துவரின் அறிவுரையில்லாமல் சாப்பிடக்கூடாது. மற்றும் டாக்டரின் மருந்து சீட்டு இல்லாமல் விற்பனையும் செய்ய கூடாது என அறிவுறுத்தியிருந்தது. அதனால் நீங்கள் இனி மாத்திரை வாங்கினீர்கள் என்றால் அதன் காலாவதி தேதியை மட்டும் பார்க்காமல் இந்த சிவப்பு கோட்டையும் பார்த்து வாங்குங்கள். மருத்துவரின் பரிந்துரையின்றி எந்த மாத்திரையையும் சாப்பிடக் கூடாது. அதனால், பல பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை எப்பொழுதும் மனதில் வைத்துக்கொண்டு இந்த செய்தியை உங்களுக்கு தெரிந்தவர்களுடன் பகிருங்கள்.

Read More : Bread | அடேங்கப்பா..!! 8600 ஆண்டுகள் பழமையான ரொட்டி துண்டு..!! மிரள வைக்கும் கண்டுபிடிப்பு..!!

Chella

Next Post

Ponmudi | பொன்முடி வழக்கு..!! ஐகோர்ட் தீர்ப்புக்கு தடை..!! உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!!

Mon Mar 11 , 2024
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட வழக்கில் குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த தீர்ப்பில் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் […]

You May Like