fbpx

JUSTIN: பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த தடா பெரியசாமி…!

பாஜகவில் பட்டியல் அணியின் மாநில தலைவராக இருந்தவர் தடா பெரியசாமி. நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் தனக்கு போட்டியிட கட்சி வாய்ப்பு கொடுக்கும் என்று பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தவர். ஆனால் அந்த தொகுதியை வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்தியாயினி அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. இவர், தற்பொழுது பாஜகவில் மாநில செயலாளராகவும் உள்ளார்.

சிதம்பரத்தைச் சேர்ந்த அவரிடம் கட்சி எந்தவிதமான ஆலோசனையும் மேற்கொள்ளாமல் கார்த்தியாயினி அவர்களை நிறுத்திவிட்டது. இதனால் அதிருப்தியில் இருந்த தடாக பெரியசாமி தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

கட்சியில் இணைப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; சிதம்பரத்தில் நான் போட்டியிட்டால் திருமாவளவன் வெற்றி பெற முடியாது என்பதால் பாஜக என்னை நிற்க விடவில்லை. சிதம்பரம் தொகுதியில் என்னைக் கேட்காமல் கார்த்திகாயினிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. திருமாவளவனுக்கு ஆதரவாக பாஜக செயல்படுகிறதுபாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் திட்டமிட்டு என்னை தவிர்த்தனர். பாஜகவில் பட்டியல் அணி மாநிலத் தலைவருக்கு மரியாதை இல்லை என அதிமுகவில் இணைந்த பின் தடா பெரியசாமி பேட்டி அளித்துள்ளார்.

Vignesh

Next Post

’மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது’..!! முதல்வர் முக.ஸ்டாலின் கடும் விமர்சனம்..!!

Sat Mar 30 , 2024
மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது. தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? என முதலமைச்சர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 20 நாட்களே உள்ளன. பரப்புரைக்கு 18 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ”பிரதமர் மோடி அவர்களே… கருப்புப் பணம் மீட்பு, மீனவர்கள் பாதுகாப்பு, 2 கோடி வேலைவாய்ப்பு, ஊழல் ஒழிப்பு போல் […]

You May Like