இந்தியா ஆஸ்திரேலிய இடையேயான 2வது ஒருநாள் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களுக்கு 5விக்கெட்டுகளை இழந்து 399 ரன்கள் எடுத்தது. இதில் நிதானமாக விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சதங்களை பதிவு செய்தனர்.
ஷ்ரேயஸ் ஐயர் 105 ரன்களுக்கும், சுப்மன் கில் 104 ரன்களுக்கும் அவுட் ஆகினர். அவர்களை தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷன் 39, கே.எல்.ராகுல் 52 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். சூரியகுமார் யாதவ் 72 ரன்களும், ஜடேஜா 13 ரன்களும் எடுத்து விக்கெட்டை பறிகொடுக்காமல் இருந்தனர். இதனையடுத்து 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 9 ஓவர்களுக்கு 2விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்துள்ளது, டேவிட் வார்னர் 26, மற்றும் லபுஸ்சேன் 17 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்த போட்டி தற்போது மழை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் குறிப்பாக 200 ஸ்ட்ரைக் ரேட்டில் சூரியகுமார் யாதவ் பேட்டிங் இருந்தது. அதுவும் கேமரன் கிரீன் வீசிய 43 வது ஓவரில் 4 சிக்ஸர்களை தொடர்ந்து அடித்து ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சாளர்களை மிரட்டினார். சூரியகுமார் யாதவ் 37 பந்துகளில் 6 சிக்ஸர், 6 ஃபோர்களுடன் 72 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்நிலையில் சூரியகுமார் யாதவ் பேட்டிங் குறித்து பதிவிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக், “ஷுப்மான் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் அற்புதமான 100 கள், ஆனால் சூர்ய குமார் யாதவ் வித்தியாசம். எங்கள் முதல் 5 அனைவரும் ஒரே வேகத்தில் விளையாடலாம், ஆனால் SKY தான் வித்தியாசம். சொந்தமாக போட்டியை சுழற்ற முடியும். தகடக் சகசக்” என்று பதிவிட்டிருந்தார். விரேந்தர் சேவாக்கின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.