fbpx

ஆளில்லா பகுதிக்கு அழைத்துச் சென்று ஆபாச படம்..!! மறுப்பு தெரிவித்த மாணவியை பலாத்காரம் செய்த ஓட்டுநர்..!!

ஆபாச படங்களை காண்பித்து பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி ஓட்டுநரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வெள்ளகுளம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் மணிகண்டன் (29). இவர், லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இதற்கிடையே, மணிகண்டன் 11ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பழகி வந்துள்ளார். இந்நிலையில், அந்த மாணவியை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்ற மணிகண்டன், அவரிடம் தனது செல்போனில் வைத்திருந்த ஆபாச வீடியோக்களை போட்டு காட்டியுள்ளான். இதற்கு மறுப்பு தெரிவித்த மாணவியை மிரட்டி, அங்கேயே வைத்து பலாத்காரம் செய்துள்ளான். பின்னர், இதுகுறித்து வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவதாக மணிகண்டன் மிரட்டியுள்ளார்.

பிறகு எல்லாம் முடித்துவிட்டு, பள்ளி மாணவியை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளான். மணிகண்டன் மிரட்டியதையும் மீறி, தனக்கு நடந்த கொடுமையை தனது தாயாரிடம் கூறி அழுதுள்ளார் அந்த மாணவி. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய், உடனடியாக திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தனது மகளை அழைத்துக் கொண்டு புகார் அளித்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி குற்றம் நிரூபிக்கப்பட்டதால், மணிகண்டனை கைது செய்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Chella

Next Post

கொடிய நோயால் அவதிப்படும் பிரபல தமிழ் நடிகை..!! கணவர் இறந்த பின்பு இப்படி ஒரு நிலைமையா..?

Tue Feb 7 , 2023
கணவர் இறந்த பின்பு தனது நினைவாற்றல் குறைந்துவிட்டதாகவும், தன்னுடைய தற்போதைய நிலை குறித்தும் வெளிப்படையாக கூறியிருக்கிறார் நடிகை பானுப்ரியா. தமிழ் திரையுலகில் 80களில் கொடிகட்டி பறந்த நடிகை பானுப்ரியா, தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிப் படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார். நடிப்பில் மட்டுமின்றி நடனத்திலும் தனது திறமையை காட்டிய இவர், கடந்த 1998ஆம் ஆண்டு ஆதர்ஷ் கவுஷல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அபிநயா என்ற மகளும் […]
கொடிய நோயால் அவதிப்படும் பிரபல தமிழ் நடிகை..!! கணவர் இறந்த பின்பு இப்படி ஒரு நிலைமையா..?

You May Like