fbpx

’தல தளபதி சலூன்’..!! இந்தா ஆரமிச்சிட்டாரு ப்ளூ சட்டை மாறன்..!! விளாசும் விஜய் ரசிகர்கள்..!!

விஜய்யின் லியோ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. இதனால் தமிழ் மட்டுமின்றி மற்ற மொழி ரசிகர்களும் லியோவை கொண்டாடி வருகின்றனர். இந்தப் படத்தின் அதிகாலை 4 மணி ஷோ, தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் திரையிடப்பட்டது. அதன்படி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, பெங்களூரு போன்ற பல ஏரியாக்களில் லியோ FDFS அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது.

இந்நிலையில், லியோ ரிலீஸை முன்னிட்டு திரையரங்குகளின் முன்பு விஜய்யின் கட் அவுட்டை ரசிகர்கள் வைத்துள்ளனர். அந்தவகையில், ஆந்திராவின் ஒரு பகுதியில், லியோ படத்திற்காக வைக்கப்பட்ட கட்அவுட் வைரலாகி வருகிறது. அதில் அவரது போஸ்டர் அருகே பான் இந்தியா ஹீரோ பிரபாஸும் செம்ம மாஸாக போஸ் கொடுத்துள்ளார். லியோ வெற்றிக்காக விஜய்க்கு மாஸ் கொடுத்துள்ளனர் பிரபாஸ் ரசிகர்கள்.

இதனைப் பார்த்த ப்ளூ சட்டை மாறன், ‘தல தளபதி சலூன்’ என தனது ட்ரோல் கணக்கைத் தொடங்கியுள்ளார். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் வரும் தல தளபதி காமெடியை வைத்து பஞ்ச் கொடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். வழக்கமாக படத்தின் விமர்சனத்தில் பங்கம் செய்யும் ப்ளூ சட்டை, லியோ படத்தை விஜய்யின் கட்அவுட்டில் இருந்தே தொடங்கிவிட்டார் என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Chella

Next Post

10-ம் வகுப்பு முடித்த நபர்களுக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு…! உடனே விண்ணப்பிக்கவும்…

Thu Oct 19 , 2023
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Graduate & Diploma (Technician) Apprentices பணிகளுக்கு என மொத்தம் 417 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அனுமதியுடன் செயல்படக்கூடிய பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் உதவித்தொகையாக ரூ.9,000 முதல் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் […]

You May Like