fbpx

ஆப்கானில் இந்துக்களின் சொத்துக்களை திரும்ப அளிக்கும் பணியில் தலிபான் நிர்வாகம்!

ஆப்கானிலிருந்து புலம் பெயர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்களின் சொத்துக்களை அவர்களிடமே திரும்ப ஒப்படைக்கும் நடவடிக்கையை தலிபான்கள் நிர்வாகம் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் முந்தைய ஆட்சி அகற்றப்பட்டு தலிபான்கள் ஆப்கான் அரசு நிர்வாகத்தை கைப்பற்றினர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் முந்தைய ஆட்சியாளர்கள் புலம் பெயர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்களின் சொத்துக்களை அபகரித்துக்கொண்டனர். இதனை அப்போதைய பாராளுமன்றத்தில் நரேந்திரசிங் கல்சா என்ற ஹிந்து எம்.பி., குரல் கொடுத்து சொத்துக்களை மீட்டு தர வேண்டும் என பேசினார்.

இதையடுத்து தற்போதைய தலிபான் ஆட்சி நிர்வாகத்தின் நீதித்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் குழு அமைத்து ஹிந்துக்கள், சீக்கியர்களின் சொத்துக்கள் இனம் காணப்பட்டு மீண்டும் அதன் உரிமையாளர்களிடயே திரும்ப ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தலிபான் செய்தி தொடர்பாளர் சுகைல் ஷாஹீன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் சிறுபான்மையினர்களான இந்துக்கள் மற்றும் சீக்கிய சமூகத்தினரின் சொத்துகளை மீட்டு அவர்களிடமே திருப்பி தர தலிபான் அரசு தீர்மானித்துள்ளது. கடந்த ஆட்சியின்போது அபகரிக்கப்பட்ட அனைத்து சொத்துகளையும் அவற்றின் உரிமையாளர்களுக்கு திருப்பி தர ஒரு கமிஷன் நிறுவப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தலிபான் அரசுடன் இந்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாகும்” எனக் கூறினார்.

Next Post

மாஸ் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு! 'GOAT'ரிலீஸ் எப்போ தெரியுமா?? 

Thu Apr 11 , 2024
தளபதி விஜய் நடித்து வரும் GOAT திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தினம், விநாயகர் சதுர்த்தி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு விஜய் நடித்த GOAT படம் ரிலீஸ் ஆக உள்ளது. ‘லியோ’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The Greatest of All Time’ படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்யின் 68-வது […]

You May Like