fbpx

சோகம்.. சிட்டிசன் பட வில்லன் நடிகர் காலமானர்..!! பிரபலங்கள் அஞ்சலி

தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகரும், தயாரிப்பாளருமான மோகன் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவிற்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் விளங்கிய மோகன் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 71. கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருந்த அவர், நேற்றிரவு காலமானார். தமிழ் திரையுலகின் 80, 90 காலகட்டத்தில் பிரபல வில்லன் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மோகன் வி நடராஜன். இவர் சொந்தமாக ஸ்ரீ ராஜகாளியம்மன் என்டர்பிரைசஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை வைத்துள்ளார்.

இதன்படி, கடந்த 1986ஆம் ஆண்டு சுரேஷ், நதியா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பூக்களை பறிக்காதீர்கள் படத்தின்‌ மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானார் மோகன் நடராஜன். அதனைத் தொடர்ந்து, விஜயகாந்த் நடித்த பூ மழை பொழியுது, பிரபு நடித்த என் தங்கச்சி படிச்சவ, சத்யராஜின் வேலை கிடைச்சிருச்சு, கோட்டைவாசல், சாமுண்டி, விஜய் நடித்த கண்ணுக்குள் நிலவு, அஜித்தின் ஆழ்வார், சூர்யாவின் வேல் மற்றும் விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். மேலும், நம்ம அண்ணாச்சி உள்ளிட்ட பல படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

பிரபல நடிகர்களுடன் நடித்ததுடன், பிரபலங்களை வைத்து படங்களைத் தயாரித்துள்ள மோகன் நடராஜன் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில வருடங்களாகவே திரைத்துறையை விட்டு விலகியிருந்தார். அவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறுதி அஞ்சலி இன்று மாலை 3 மணியளவில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

Read more ; ‘வரட்டா மாமே.. டுர்ர்!!’ ஸ்மார்ட் சைக்கிளில் பாடிக்கொண்டே சென்ற ஸ்டாலின்..!! வைரலாகும் வீடியோ..

English Summary

Tamil cinema’s famous villain actor and producer Mohan Natarajan passed away due to ill health. Celebrities mourned his death.

Next Post

பழுதான வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள்.. இடிந்து விழுந்தா யார் பொறுப்பு? அதிகாரிகள் பரபரப்பு தகவல்

Wed Sep 4 , 2024
Dilapidated Housing Board flats.. Who is responsible if they collapse?

You May Like