fbpx

சிங்கப்பூரின் 9-வது அதிபராக பதவியேற்றார் தமிழர் தர்மன் சண்முகரத்தினம்..!

சிங்கப்பூரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியும், தமிழருமான தர்மன் சண்முகரத்னம் 70.4 % வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இதனையடுத்து இன்று அதிபராக பதவியேற்றார் தர்மன் சண்முகரத்தினம்.

சிங்கப்பூரில் அதிபராக இருந்த 68 வயது பெண்மணியான ஹலீமா யாக்கோப் அவர்களின் 6 ஆண்டு பதவி காலம் செப்.13ஆம் தேதியுடன் முடிவடைந்தது. கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மலாய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே போட்டியிட அனுமதி வழங்கப்பட்டது. அதனால், ஹலீமா யாகூப் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால், அவர் போட்டியின்றி அதிபராக தேர்வானார். ஹலீமா யாக்கோப் தான் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார். இதனையடுத்து அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கேபினட் மந்திரி பதவியில் இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முக ரத்னம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

சிங்கப்பூர் அதிபர் தேர்தல் செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற்றது. இதில் சிங்கப்பூரில் பிறந்த தமிழரான முன்னாள் அமைச்சா் தர்மன் சண்முகரத்னம், சீன வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான கோக் சாங், டான் கின் லியான் ஆகிய 3 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று தர்மன் சண்முக ரத்னம் வெற்றி பெற்றார். இதனால், சிங்கப்பூரின் 9-வது அதிபராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் போட்டியிட்ட மற்ற இரு வேட்பாளர்களுக்கு 20 சதவீதத்திற்கு குறைவான வாக்குகளே பெற்றனர்.

இந்நிலையில் 70.4 % வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியும், தமிழருமான தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூரின் 9-வது அதிபராக பதவியேற்றார்.

Kathir

Next Post

பிறப்புச் சான்றிதழ் புதிய விதி "அக்டோபர் 1 முதல் அமல்"..! இதனால் என்னென்ன மாற்றங்கள்..!

Thu Sep 14 , 2023
பிறப்புச் சான்றிதழ் என்பது ஒரு நபரின் சட்டபூர்வமான இருப்பை நிரூபிக்கிறது. பிறப்புச் சான்றிதழலில் புதிதாகப் பிறந்த குழந்தையின் பிறந்த தேதி, பிறந்த இடம், பாலினம் மற்றும் பெயரை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ ஆவணமாகும். கடந்த சில ஆண்டுகளாக அனைத்து வகையான நடவடிக்கைகளுக்கும் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு கூறி வந்த நிலையில், அனைத்து வகையான பதிவுகளுக்கும் பிறப்புச் சான்றிதழை ஒரே ஆவணமாகப் பயன்படுத்தலாம் என மத்திய உள்துறைஅமைச்சகம் அறிவித்து […]

You May Like