fbpx

’தமிழன் கொடி தலைவன் கொடி’..!! பாடலை கேட்டதும் கண்ணீர் விட்டு அழுத புஸ்ஸி ஆனந்த்..!! விஜய் ரியாக்‌ஷன்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடி மற்றும் பாடலை இன்று (ஆகஸ்ட் 22) விஜய் அறிமுகம் செய்து வைத்தார். மேலும் கீழும் சிகப்பு நிறத்திலும், நடுவில் மஞ்சள் நிறத்திலும் உள்ள அந்த கொடியில் வாகை பூவும், 2 யானைகளும் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் பாடலும் வெளியானது. பாடலாசிரியர் விவேக் வரியில், தமன் இசையில் இப்படம் உருவாகியுள்ளது.

இந்த கட்சிக் கொடியை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து எளிமையான முறையில் நடைபெற்றது. கட்சிக்கொடி அறிமுக விழாவுக்கு 5,000 பேர் பங்கேற்பார்கள் எனக்கூறி காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டு அனுமதி கோரியிருந்த நிலையில், 300 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. விஜயின் தலைமையில் தவெக நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நெஞ்சில் கை வைத்து, உறுதி மொழியை விஜய் வாசிக்க, நிர்வாகிக்ள் உறுதிமொழி ஏற்றனர்.

இந்நிகழ்ச்சி புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற நிலையில், கட்சியின் பாடல் மேடையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அப்போது, விஜய்யின் அருகில் அமர்ந்திருந்த புஸ்ஸி ஆனந்த் கண்ணீர் விட்டு அழுதார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read More : தவெக கட்சிக் கொடியின் அர்த்தம் என்ன தெரியுமா..? இவ்வளவு பெரிய வரலாறே இருக்கா..?

English Summary

Bussy Anand who was sitting next to Vijay burst into tears.

Chella

Next Post

உஷார்..!! பெண்களின் பாதுகாப்பை கேள்வி குறியாக்கும் UPI பரிவர்த்தனைகள்..!!

Thu Aug 22 , 2024
Paytm, Google Pay, PhonePe UPI transactions are putting your safety at risk

You May Like