fbpx

தமிழக பாஜக முக்கிய புள்ளி மருத்துவமனையில் அனுமதி..!

பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ஜலதோஷம், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதின் காரணமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அதில் அவருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வானதி சீனிவாசன், பா.ஜனதா மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர், மாநிலச் செயலாளர், மாநிலப் பொதுச் செயலாளர் போன்ற பதவிகளை வகித்தார். தற்போது பாஜக மகளிர் அணியின் தேசியத் தலைவராக உள்ளார். 2011 சட்டமன்ற தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியிலும், 2016 சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியிலும் பாஜக சார்பில் போட்டியிட்டுத் தோற்றார். பின்னர் 2021 சட்டமன்ற தேர்தலில் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தோற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வானதி சீனிவாசன் விரைந்து உடல்நலம் பெற வேண்டும் என தொண்டர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.

Kathir

Next Post

என்னது?… தாஜ்மஹால் இந்து கோவிலா?… 22 அறைகள் பூட்டப்பட்டுள்ளதா?... நீங்காத மர்மம்!

Wed Nov 1 , 2023
காதல் மனைவி மும்தாஜின் நினைவாக உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா நகரில் யமுனை நதிக்கரை ஓரமாக முகலாய பேரரசர் ஷாஜகானால் தாஜ்மஹால் கட்டப்பட்டது. 1632 முதல் 1653 ஆம் ஆண்டு வரை இதன் கட்டுமானப் பணி நடைபெற்றுள்ளது. வெண்மை நிறத்தில் அழகிய கட்டிட கலையுடன் கட்டப்பட்ட இதை தினசரி லட்சக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். வெளிப்புறத்தில் அழகு பதுமையாக காட்சியளிக்கும் தாஜ்மஹாலுக்கு உள்ளே பல மர்மங்கள் […]

You May Like