பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 55,000 பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் இந்த ஆண்டு நிரப்பப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3வது முறையாக கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றிய பின்னர் சுதந்திர தின விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்; சென்னை கதீட்ரல் சாலையில் ஃபிளேம் லில்லி பூங்கா அருகே 6.9 ஏக்கர் நிலப்பரப்பில் தமிழக அரசு புதிய பூங்கா அமைக்கும். புதிய பூங்கா ரூ.25 கோடி செலவில் அமைக்கப்படும்.
பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 55,000 பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் இந்த ஆண்டு நிரப்பப்படும். இந்திய ஒன்றியத்தின் முக்கியமான அங்கம் தமிழ்நாடு உள்ளது, கலைஞர் நூற்றாண்டில் கோட்டையில் கொடி ஏற்றுவதை பெருமையாக கருதுகிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.