fbpx

Tamil Nadu Forest Department | தமிழ்நாடு வனத்துறையில் கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போது புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர் :

34 உதவி வரைவாளர் (Assistant Draughtsman)

38 இளநிலை வரைவு தொழில் அலுவலர் (Junior Draughting Officer)

காலியிடங்கள் :

உதவி வரைவாளர் (34)

இளநிலை வரைவு தொழில் அலுவலர் (38)

சம்பளம் :

உதவி வரைவாளர் பதவிக்கு நிலை -8 கீழ் ரூ.19,500 முதல் ரூ.71,900

இளநிலை வரைவு தொழில் அலுவலர் பதவி நிலை – 11 கீழ் ரூ.35,400 முதல் ரூ.1,30,400

வனத்துறையில் உள்ள 34 வரைவாளர் மற்றும் 38 இளநிலை வரைவு தொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளிக்க வேண்டும் என்ற வனத்துறை தலைவர் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்திருந்த நிலையில், தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வனத்துறை பள்ளியில் காலிப்பணியிடங்கள்

மேலும், வனத்துறையில் கீழ் இயங்கும் 20 வன பழங்குடி பள்ளிகளில் 87 ஆசிரியர் மற்றும் இதர பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இப்பள்ளிகளில் இருக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், பி.டி ஆசிரியர், ஓவிய மாஸ்டர், உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி பயிற்சியாளர், ஆய்வக உதவியாளர் மற்றும் பகுதி நேர தொழிற்பயிற்சியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : சேலம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு..!! 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

English Summary

An employment notification has been issued to fill vacant posts in the Tamil Nadu Forest Department.

Chella

Next Post

"மாதவிடாய் காலத்தில் அறையில் அடைத்துவைத்தனர்; ஒரு வாரம் குளிக்கக்கூட அனுமதிக்கவில்லை"!. மாமியாரின் மூடநம்பிக்கையால் விவாகரத்து பெற்ற பெண்!

Wed Feb 5 , 2025
"They locked me in a room during my period; I wasn't even allowed to take a bath for a week"!. Woman gets divorced because of her mother-in-law's superstition!

You May Like