fbpx

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு..! வெளியான முக்கிய அறிக்கை..!

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வை உடனே அறிவிக்க வேண்டுமென சசிகலா வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வினை முன் தேதியிட்டு அறிவித்து நிலுவை தொகையினை உடனே வழங்கிட வேண்டும். கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வினை மத்திய அரசு மார்ச் மாத இறுதியிலேயே வழங்கிவிட்டது. இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு பற்றி சிந்திக்க கூட மனமின்றி 4 மாதங்களாக திமுக அரசு காலம் கடத்தி வருகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி காலங்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்களும் அகவிலைப்படி பெற்று வந்துள்ளனர்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு..! வெளியான முக்கிய அறிக்கை..!

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அரசு ஊழியர்களின் பாதுகாவலன் என விளம்பரம் செய்துகொண்டு திமுக பல வாக்குறுதிகளை அரசு ஊழியர்களுக்கு அளித்து ஆட்சியை பிடித்தது. ஆட்சி கட்டிலில் அமர்ந்தவுடன் அரசு ஊழியர்களுக்கு அளித்து வந்த அகவிலைப்படியை முடக்கிவிட்டது. அதேபோல், அரசு ஊழியர்கள் தாங்கள் ஈட்டிய விடுப்பினை ஒப்படைத்து பணம் பெறும் சலுகையினையும் பறித்துள்ளது. திமுக அரசு பதவி ஏற்ற நாள் முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கு தர வேண்டிய அகவிலைப்படியை நிலுவைத் தொகையின்றி பின் தேதியிட்டு வழங்கி அரசு ஊழியர்களுக்கு துரோகத்தை இழைத்து வருவதை தமிழக அரசு ஊழியர்கள் இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு..! வெளியான முக்கிய அறிக்கை..!

அரசு ஊழியர்கள் தான் அரசின் அச்சாணி என்பதை ஒரு கணம் சிந்தித்து பார்க்க வேண்டும். அரசு ஊழியர்களின் பிற முக்கிய கோரிக்கைகளையும் சட்டசபை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளையும் கருத்தில் கொண்டு விரைவாக நிறைவேற்றுவதுடன் பறிக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் அளிக்குமாறு திமுக அரசை கேட்டுக் கொள்கிறேன். இவை அனைத்திற்கும் மேலாக திமுகவினரின் அராஜகங்கள், அத்துமீறல்களுக்கு மத்தியிலும் தமிழக அரசு ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்வது மிகுந்த சிரமமாக இருப்பதாக சொல்லி வேதனைப்படுகிறார்கள்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு..! வெளியான முக்கிய அறிக்கை..!

இதற்காகவே, திமுக அரசு தமிழக அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக அகவிலைப்படி உயர்வு அளிக்க முன்வர வேண்டும். எனவே, திமுகவினர் இனியும் காலதாமதம் செய்யாது தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வினை முன் தேதியிட்டு அறிவித்து நிலுவைத் தொகையினை உடனே வழங்கிடுமாறு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

எடப்பாடி பழனிசாமிக்கு புதிய சிக்கல்.. டெண்டர் முறைகேடு வழக்கில் திமுகவின் ஆர்.எஸ். பாரதி கூடுதல் மனு..

Tue Aug 2 , 2022
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் ஆர்.எஸ். பாரதி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.. எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை உறவினர்கள், நண்பர்களுக்கு சட்டவிரோதமாக வழங்கி ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக கடந்த 2018ஆம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து, புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த […]

You May Like