தமிழகத்தில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் சென்ற செப்டம்பர் மாதம் அதிகரிக்கப்பட்டது. புதிய மின் கட்டணத்தின்படி வீடுகளுக்கான மின்சார கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டதால் மின்கட்டணத்தை செலுத்த இயலாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இருந்தாலும் மின்வாரியத்திற்கு 1,65,000 ரூபாய் கடன் இருந்து வருகிறது இதனை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றால் எதிர்வரும் 5 வருடத்திற்கு வருடத்திற்கு 6 சதவீதம் அல்லது 5 வருடங்களில் 30% மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை வாரியம் அறிவுறுத்தி இருக்கிறது. அதற்கான ஒப்புதலையும் வழங்கி உள்ளது.
இந்த நிலையில், நேற்று உயர் அதிகாரிகளுடன் மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி ஆலோசனையில் இறங்கினார். இந்த நிலையில் மின் கட்டண உயர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் வீட்டு இணைப்புகளுக்கு எந்த வித கட்டண உயர்வும் இல்லை எனவும் வேளாண் இணைப்புகள் குடிசை இணைப்புகள் விடுதலைப்பு 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி, விசைத்தறி உள்ளிட்டவற்றுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே ஒரு யூனிட் 13 பைசா முதல் 21 பைசா வரையில் மிக குறைந்த அளவில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மீட்டு மின் இணைப்புகளுக்கு மின் கட்டணம் எந்த விதத்திலும் உயர்த்தப்படாதது மட்டுமல்லாமல், வணிக மற்றும் தொழில் மின் இணைப்புகளுக்கு மிகக் குறைந்த அளவிலேயே கட்டணங்கள் உயர்த்தப்பட்டு இருப்பதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.