fbpx

பாம்பு கடியை நோயாக அறிவித்தது தமிழ்நாடு அரசு..!! இனி கட்டாயம் தெரிவிக்க வேண்டும்..!!

பாம்பு கடியை “அறிவிக்கை செய்யக்கூடிய நோயாக” தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பாம்பு கடி விஷம் என்பது உயிருக்கு ஆபத்தான ஒரு தீவிர மருத்துவ நிலை. இது வெப்பமண்டல, மிதவெப்ப மண்டல நாடுகளில் உள்ள கிராமப்புற மக்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு தடுக்கக்கூடிய பொது சுகாதார நிலை. உலக சுகாதார அமைப்பு பாம்பு கடியால் ஏற்படும் இறப்புகள், குறைபாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய உத்தியை அறிமுகப்படுத்தியுள்ளது.

சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட பாம்பு கடி விஷத்தை தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயல் திட்டம் ஒரு சுகாதார அணுகுமுறை மூலம் 2030-க்குள் பாம்பு கடி இறப்புகளை பாதியாகக் குறைப்பதற்கான வரைபடத்தை உருவாக்கியுள்ளது. விவசாயத் தொழிலாளர்கள், குழந்தைகள் மற்றும் பாம்புகள் அதிகமுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

பாம்பு கடியை “அறிவிக்கை செய்யக் கூடிய நோயாக” மாற்றுவதன் மூலம், தரவு சேகரிப்பு. மருத்துவ உட்கட்டமைப்பு மற்றும் பாம்பு கடியால் இறப்பதைத் தடுப்பதற்கான விஷமுறிவு மருந்து வழங்குவதன் மூலம் சிகிச்சை மேம்படுத்தப்படும். ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளம் – ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் பாம்பு கடி, பாம்பு கடியால் ஏற்படும் இறப்பு தொடர்பான அறிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதுவரை பாம்பு கடி மற்றும் பாம்பு கடியால் ஏற்படும் இறப்பின் எண்ணிக்கையிலும், தரவுகளின் எண்ணிக்கையிலும் வேறுபாடு உள்ளது. பாம்பு கடி பற்றிய அறிவிப்பு அனைத்து அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் அரசுக்குத் தரவைத் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாக்குகிறது. இது, தமிழ்நாட்டில் பாம்பு கடிக்கான விரிவான தடுப்பு மற்றும் சிகிச்சை உத்திகளுக்குப் பயன்படுத்தக்கூடிய சிறந்த தரவு சேகரிப்புக்கு வழிவகுக்கும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Read More : Madras Eye | ஆட்டம் காட்டும் மெட்ராஸ் ஐ..!! அறிகுறிகள் என்ன..? வராமல் தடுப்பது எப்படி..?

English Summary

The Tamil Nadu government has declared snakebite as a “notifiable disease”.

Chella

Next Post

கொய்யா கேட்டு வீட்டுக்குள் நுழைந்த இளைஞர்..!! திடீரென கேட்ட இளம்பெண்ணின் அலறல் சத்தம்..!! பரபரப்பை கிளப்பிய சம்பவம்..!!

Sat Nov 9 , 2024
The youth entered the house asking for Guava..!! Suddenly heard the scream of the young woman..!! The sensational incident..!!

You May Like