fbpx

திரையரங்க பார்க்கிங் கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய வேண்டும்.. தமிழக அரசு உயர்நீதிமன்றம் உத்தரவு..

திரையரங்க பார்க்கிங் கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள திரையரங்குகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கான கட்டணத்தை கடந்த 2017-ம் ஆண்டு மாற்றி அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.. ஆனால் இந்த கட்டணம் குறைவாக இருப்பதாக சென்னை ராயபுரத்தில் உள்ள உட்லேண்ட்ஸ் திரையரங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.. திரையரங்குகளில் வாகன நிறுவத்துற்கான கட்டணம் குறைவாக உள்ளதாவும், அந்த கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று திரையரங்கம் தரப்பில் கோரப்பட்டது..

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆர். சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது நீதிபதி “ கட்டணம் எந்த அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டது என்பதை முழுமையாக தெரிவிக்கவில்லை.. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவிலும் உரிய விளக்கம் இல்லை..” என்று தெரிவித்ததார்..

எனவே திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணத்தை மாற்றியமைத்து 2017-ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.. மேலும், கட்டணத்தை மறு நிர்ணயம் செய்து புதிய கட்டணத்தை வெளியிட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு ஆணையிட்டார்..

Maha

Next Post

நிதி நிலைமை சீரானவுடன்... பெண்களுக்கான உரிமை தொகை ஆயிரம் ரூபாய் உறுதியாக வழங்கப்படும்... மு.க. ஸ்டாலின்

Thu Sep 1 , 2022
கோவையில் முன்னாள் அமைச்சர்  பொங்கலூர் பழனிச்சாமி  இல்ல திருமண விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். கோவை கொடிசியா வளாகத்தில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் மகன் கௌசிக் தேவ்விற்கும், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி பேத்தி ஸ்ரீநிதிக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 1972-ஆம் வருடம் பொங்கலூர் பழனிச்சாமி திருமணத்தையும், 1999 ல் பொங்கலூர் பழனிச்சாமி மகன் பைந்தமிழ்பாரி  […]

You May Like