தமிழகத்தில் மின்சாரக் கட்டண உயர்வுக்கு தமிழக அரசு பொறுப்பேற்காது. ஒன்றிய அரசின் உதய் திட்டத்தை கடந்த ஆட்சியாளர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.இதனால்தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சென்னையில் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அப்போது சைதை சாதிக் பற்றி கேள்வியெழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த நாஞ்சில் சம்பத் ’’ திராவிட மேரமகள் ஒரு பல்கலைக்கழகம் , தம்பி சைதை சாதிக் பேசியிருப்பது தவறு அவரின்பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். என்றார் இதே போல அண்ணாமலை பேசியது பற்றி கேட்டபோது. அவர் தலைவரே கிடையாது இறக்குமதி சரக்கு என்றார்.
போக்குவரத்து விதிமீறல் கட்டணம் உயர்த்தப்பட்டது பற்றிய கேள்விக்கு தமிழ்நாடு விபத்துக்களின் பலிகிடா ஆகிவிடக்கூடாது என்பதற்காக போடப்பட்ட சட்டம் . காவல்துறையினர் நேர்மையாக பயன்படுத்த வேணடும் என தெரிவித்தார்.
தொடர்ந்து மின்சாரக் கட்ட உயர்வை மறைக்க விலை ஏற்றமா? என கேள்வி கேட்டதற்கு மின் கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு அரசு பொறுப்பாகாது. கடந்த ஆட்சியளார்கள் ஒன்றிய அரசின் உதய் திட்டத்தை ஒப்புதல் அளித்துள்ளனர். இதனால்தான் கட்டணம் உயர்ந்துள்ளது என தெரிவித்தார். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் மின்சாரக் கட்டணம் குறைவாக இருப்பதாக அவர் கூறினார். எனவே மேலும் மின் கட்டணம் குறையும் என்பதற்கு வாயப்பில்லை. மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார். மின்சாரத்தை சேமிக்கவும தயாராக வேண்டும் என்றார்.