fbpx

திவாலாகும் நிலையில் தமிழ்நாடு அரசு..? அண்ணாமலை போட்ட புது குண்டு..!! அதிர்ச்சியில் மக்கள்..!!

தமிழ்நாட்டில் ஸ்மார்ட் கிளாஸ், ஸ்மார்ட் போர்டு, ஹைடெக் லேப் என பல விதமான வசதிகளை பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்து வருகிறது. இந்த ஸ்மார்ட் கிளாஸ், ஸ்மார்ட் போர்டு போன்றவற்றை அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் உபயோகித்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள 385 மாவட்ட கல்வி அலுவலகங்களில் இணையதள இணைப்பு பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், மாவட்ட கல்வி அலுவலகங்களில் இணையதள இணைப்புக்கான கட்டணம் செலுத்தப்படாமல் உள்ளது. இதனால், இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அலுவலக வேலைகளை சரிவர செய்ய முடியாமல் அதிகாரிகள், மாணவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். அதேபோல், ஆசிரியர்களின் சம்பளப் பட்டியல் தயாரிப்பு பணியிலும் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திவால் ஆகும் நிலையில் இருக்கிறதா தமிழ்நாடு அரசு..? இதுகுறித்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகம் முழுவதும் உள்ள 385 மாவட்ட கல்வி அலுவலகங்களில் இணையதள இணைப்புக்கான கட்டணம், பல மாதங்களாகச் செலுத்தப்படாமல் உள்ளது. இதனால், இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஆசிரியர்களின் சம்பளப் பட்டியல் தயாரிப்பதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சியில், தமிழகம் கடன்கார மாநிலமாக மாறியுள்ளது. சுமார் ரூ.8.5 லட்சம் கோடி வரை கடனில் தமிழ்நாடு இருக்கிறது. வாங்கும் கடன் முழுவதும், அன்றாடச் செலவுகளுக்குத் தான் பயன்படுகிறதே தவிர, வாங்கிய நோக்கத்துக்குப் பயன்படுத்தப்படுவதில்லை என்று, சிஏஜி தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையில், திமுக அரசு, தமிழக அரசின் நேரடி வரி வருமானத்தையும், ஜிஎஸ்டியில் தமிழகத்தின் பங்காகக் கிடைக்கும் சுமார் 70% நிதியையும் எந்த வகையில் செலவு செய்கிறது என்ற கேள்வி எழுகிறது. இந்த நிதியெல்லாம் எங்கே செல்கிறது?. திவால் ஆகும் நிலையில் தமிழ்நாடு அரசு இருக்கிறதா..? என்று முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Read More : ”இப்படி செய்தால் வைரஸ் தொற்று நம்மை நெருங்காது”..!! தமிழ்நாட்டில் வினோத திருவிழா..!! எங்கு தெரியுமா..?

English Summary

“Chief Minister Stalin should clarify to the people whether the Tamil Nadu government is in a state of bankruptcy,” Annamalai said.

Chella

Next Post

முன்பின் தெரியாத நபருடன் உடலுறவு கொள்வது போல் கனவு வந்தால்... என்ன அர்த்தம்..?

Mon Dec 23 , 2024
What does it mean if you have dreams about sex? What do these dreams mean?

You May Like