fbpx

#Tngovt: கட்டாயம் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்…! தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை…! ‌‌ ‌

மின் நுகர்வோர்களின் ஆதார் எண்ணுடன், மின் இணைப்பு எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.
தற்பொழுது அதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.

அதில், ஆதார் சட்டம் 2016 பிரிவு 7ன் கீழ், மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். முதல் 100 யூனிட்டை இலவசமாக பெறும் வீட்டு நுகர்வோர், இலவச மின்சாரம் பெறும் குடிசை நுகர்வோர் மற்றும் விவசாயிகள், 750 யூனிட் இலவச மின்சாரம் பெறும் விசைத்தறி நுகர்வோர் மற்றும் 200 யூனிட் இலவசமாக பெறும் கைத்தறி நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

மேலும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்ற மானியம் பெறாத மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் இல்லை, ஒரே வளாகத்தில் அதிக இணைப்புகள் வைத்திருப்போர், பிற மோசடிகளில் ஈடுபடுபவர்களைக் கண்டுபிடிக்கவே ஆதார் எண்ணை மின் நுகர்வோர் இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஆண்டுக்கு ரூ.10,656 வரை தமிழக அரசின் இலவச பேருந்து பயணம் மூலம் சேமிக்கும் பெண்கள்!!!

Mon Nov 28 , 2022
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த வருடம் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் நகர்ப்புறங்களில் வெள்ளைப் போர்டு கொண்ட பேருந்துகளிலும் கிராமப்புறங்களில் நகரப் பேருந்துகளிலும் செயல்படுத்தப்பட்டது. இதில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் நகரப் பேருந்துகளில் கடந்த அக்டோபர் 5ம் தேதி வரை 176.84 கோடி பயணங்களும், நாள் […]

You May Like