fbpx

தமிழக அரசு வழங்கும் சுற்றுலா தொழில் முனைவோர் விருது…! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்…?

சுற்றுலா தொழில் முனைவோர்கள் விருதுக்கு சேலம் மாவட்டத்தைச் சார்ந்த நபர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு சுற்றுலாத்துறை, உலக சுற்றுலா தினம் செப்டம்பர்-27 முன்னிட்டு ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர்களுக்கு விருதுகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தொழில் முனைவோர்கள் விருது பெறுவதற்கு சேலம் மாவட்டத்தைச் சார்ந்த சுற்றுலா தொழில் முனைவோர்களிடமிருந்து விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2021-2022 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற கூட்டத்தொடரில் சுற்றுலா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக 30 முக்கிய முயற்சிகள் அறிவிக்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில்முனைவோர்கள் விருதுக்கான விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இப்பொருள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள சுற்றுலா அலுவலர், சேலம் தொலைபேசி எண். 89398 96397 மற்றும் 0427-2416449 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Tamil Nadu Government Tourism Entrepreneurship Award

Vignesh

Next Post

Flex நிறுவனத்தில் வேலை..!! சம்பளம் எவ்வளவு..? விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!!

Thu Aug 29 , 2024
Recruitment for the post of Associate Engineer in the IT department is going on in a reputed company. Candidates will be posted in Chennai.

You May Like