fbpx

தமிழக அரசின் “அவ்வையார் விருது” எழுத்தாளர் பாமாவுக்கு அறிவிப்பு..!

தமிழக அரசின் 2024 ஆண்டுக்கான அவ்வையார் விருது எழுத்தாளர் பாமாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சமூகச் சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் தொண்டாற்றும் பெண்களுக்கு ஆண்டுதோறும் அவ்வையார் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழக அரசின் 2024 ஆண்டுக்கான அவ்வையார் விருது எழுத்தாளர் பாமாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு சாா்பில் மார்ச் 7ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், 2012 -ஆம் ஆண்டு முதல் ஒவ்வோா் ஆண்டும் சா்வதேச மகளிா் தினத்தன்று சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் தமிழக அரசால் ‘அவ்வையாா் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுவோருக்கு ரூ.1.50 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

அந்த வகையில் சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் 2024-ஆம் ஆண்டுக்கான அவ்வையார் விருதை இலக்கியத்தில் தலித் மக்களின் குரலாக ஒலித்து, சமூகத் தொண்டாற்றி வரும், முன்னணி எழுத்தாளரான விருதுநகா் மாவட்டத்தைச் சோந்த பாஸ்டினா சூசைராஜ் (எ) பாமாவுக்கு வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் வாழ்க்கையை, குறிப்பாக ஒடுக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையை இலக்கிய படைப்புகளாகவும், ஜாதி மற்றும் பாலினம் சாா்ந்து சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையை எடுத்துக்காட்டும் தொகுப்புகளாகவும் எழுதியுள்ளாா். அவரது கருக்கு, சங்கதி, வன்மம், மனுசி போன்ற நாவல்களும், கிசும்புக்காரன், கொண்டாட்டம், ஒரு தாத்தாவும் எருமையும் போன்ற சிறுகதைத் தொகுப்புகளும் குறிப்பிடத்தக்கவை. இவா் எழுதிய கருக்கு என்ற புதினம் ஆங்கிலத்தில் மொழி பெயா்க்கப்பட்டு, 2000-இல் ‘கிராஸ் வோல்ட்புக்’ விருதை பெற்றுள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kathir

Next Post

மன்னிப்பு கேட்ட IRCTC..! வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட தயிரில் பூஞ்சை!…

Fri Mar 8 , 2024
IRCTC: வந்தே பாரத் ரயில் சென்ற பயணிக்கு பரிமாறப்பட்ட தயிரில் பூஞ்சை இருந்த சம்பவத்தால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தொலைதூர பயணங்களுக்காக பொதுமக்கள் அதிகளவில் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இதனால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அதனடிப்படையில், ரயில்களில் உணவுகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், பயணிக்கும் இடங்களில் உணவு வகைகள் எப்படியிருக்குமோ என்கிற பாதுகாப்பு கருதியும் தான் பலரும் ரயிலில் உணவு வகைகளை ஆர்டர் […]

You May Like