fbpx

ரூ.62,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? விவரம் உள்ளே..!!

தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர் மற்றும் காலியிடம்: ஜீப் ஓட்டுநர் (3), அலுவலக உதவியாளர் – (10)

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 8ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரவுக் காவலர் பதவிக்கு தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஜீப் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். வாகனங்களை ஓட்டியதற்கான முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்: ஜீப் ஓட்டுநர் பணிக்கு ரூ. 19,500 முதல் ரூ. 62,000 வரையும், அலுவலக உதவியாளர் பணிக்கு ரூ. 15,700 முதல் ரூ.50,000 வரையும் சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?: விண்ணப்பப் படிவத்தை நேரடியாக அலுவலங்களில் இருந்தும், தூத்துக்குடி மாவட்ட இணையதளமான thoothukudi.nic.in -இல் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (வளர்ச்சி பிரிவு), இரண்டாம் தளம் – கோரம்பள்ளம், தூத்துக்குடி. 628 101, தொலைபேசி எண் – (0461 – 2340579) என்ற முகவரிக்கு எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

Chella

Next Post

மது அருந்திவிட்டு மணமேடையில் மடியில் சாய்ந்த மணமகன்..!! கோபத்தில் மணப்பெண் செய்த காரியம்..!!

Mon Mar 13 , 2023
அசாம் மாநிலம் நல்பாரி மாவட்டத்தில் கடந்த 2ஆம் தேதி நடந்த ஒரு திருமணத்தில் தடபுடல் ஏற்பாடுகள் எல்லாம் செய்து வந்திருக்கிறார்கள். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்த இரு வீட்டைச் சேர்ந்த உறவினர்கள் வந்துள்ளனர். திருமணத்தில் தாலி கட்டுவதற்கு முன்பாக மணமகன் பட்டு வேட்டி சட்டையில் உட்கார வைக்கப்பட்டு இருந்திருந்தார். திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது மணமகனின் நடவடிக்கையை பார்த்த அனைவருக்கும் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக மணமகளுக்கு அதிக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் […]
மது அருந்திவிட்டு மணமேடையில் மடியில் சாய்ந்த மணமகன்..!! கோபத்தில் மணப்பெண் செய்த காரியம்..!!

You May Like