தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்து ஆணிஅஃ பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் மேலும் 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உத்தராவது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் ராஜாராமன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழில்துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆனந்த் குமார் ஐஏஎஸ், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவரான அர்ச்சனா பட்நாயக், தொழில்துறை ஆணையர் மற்றும் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையராக பூஜா குல்கர்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார். வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையாக பிரகாஷ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.