fbpx

தமிழக அரசின் சூப்பர் திட்டம்..!! பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்..!! எப்படி வாங்குவது..?

ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்கள் ஆகியோர் சுயதொழில் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு ‘இலவச தையல் இயந்திரம்’ வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இத்திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்துள்ளனர். 2021-22 நிதியாண்டில் மட்டும் ரூ.1.35 கோடி செலவில், 2,250 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. இந்நிலையில் சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தின் வாயிலாக, தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தில் பயன்பெற 20 முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், பதிவு பெற்ற தையல் நிறுவனத்திடம் இருந்து தையல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானச் சான்று ரூ.72,000க்குள் கீழ் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவத்தை தென் சென்னை மாவட்ட சமூகநலம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிங்காரவேலர் மாளிகை, 8வது தளம், இராஜாஜிசாலை, சென்னை- 01 அலுவலத்தில் இருந்து வாங்கி கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை, 2 புகைப்படம், வருமானச் சான்று, சாதிச் சான்று, வயதுச் சான்று ஆகிய சான்றுகள் இணைக்கப்பட்டு வரும் 6ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

திறன் இந்தியா திட்டம்.... திறமையான இளைஞர்களை உருவாக்கும் மத்திய அரசு...!

Sun Mar 5 , 2023
திறன் இந்தியா திட்டம் திறமையான இளைஞர்களை உருவாக்கி வருகிறது என மத்திய அமைச்சர் முருகன் குறிப்பிட்டார் ‌ சென்னை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் முருகன், 2047 ஆம் ஆண்டில் 100 வது சுதந்திரத்தின் போது நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை நோக்கி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டு தற்போது செயலாற்றி வருகிறது என்று தெரிவித்தார். அடுத்த 25 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் […]
’ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஒழிக்க முடியாது’..!! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பரபரப்பு பேட்டி..!!

You May Like