Modi: மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபின் முதல்முறையாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன பேரணியில் (ரோடு ஷோ) பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டத்திலேயே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேட்புமனு தாக்கலானது, வரும் 20ஆம் தேதி துவங்கி, 27ஆம் தேதி நிறைவடைகிறது. திமுக கூட்டணி தவிர, அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட மற்ற கட்சிகள் கூட்டணியையே இன்னும் இறுதி செய்யாத நிலை உள்ளது.
இந்தநிலையில், மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபின் முதல்முறையாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன பேரணியில் (ரோடு ஷோ) பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று மாலை கர்நாடக மாநிலம் சிவமொக்கா விமான நிலையத்தில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு மாலை 5.30 மணிக்கு வருகிறார். பின்னர் கோவை சாய்பாபா காலனியில் உள்ள சாய்பாபா கோவில் சிக்னல் பகுதியில் இருந்து பிரதமர் மோடியின் வாகன பேரணி தொடங்குகிறது. சாய்பாபா காலனியில் தொடங்கும் வாகன பேரணி ஆர்.எஸ்.புரம் காமராஜர்புரம் தலைமை தபால் நிலையம் அருகே நிறைவு பெறுகிறது.
இதற்காக, கோவை மாநகர பகுதியில் உள்ள கவுண்டம்பாளையம் சந்திப்பு முதல் ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் வரை சுமார் மூன்று கிலோமீட்டர் அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சாலையின் இரு புறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கட்சிக்கொடிகள் நடப்பட்டு வருகின்றன. மாநகராட்சி பணியாளர்கள் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநகர காவல் துறையோடு இணைந்து மத்திய பாதுகாப்பு குழுவினரும் பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Readmore: பாவ பணத்தில் அரசியல் செய்யும் திமுக”… தேர்தல் பத்திர விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்.!