fbpx

தமிழகத்தில் இன்றும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படும் ஆனால்……! வெதர்மேன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு……!

தமிழகத்தின் பத்தறிவின் மொழிந்த பின்னரும் கூட பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. இதன் காரணமாக, இரவு நேரங்களில் ஒழுக்கம் காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் பெய்த மழை மாக்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியது.

ஆனாலும் சில பகுதிகளில் வெயிலின் தாக்கம் அடுத்த 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது இந்த நிலையில், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, ராணிப்பேட்டை போன்ற பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல கடுமையான வெப்பத்திற்கு பின்னர் மாலை அல்லது இரவு சமயங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் பதிவிட்டுள்ளார். அதேபோல மற்ற தனியார் வானிலை ஆய்வாளர்களும் வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அந்த விதத்தில், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

இன்றும், நாளையும், தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் போன்ற இடங்களில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதோடு 10 மற்றும் 11ஆம் தேதிகளில் தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

பள்ளி பாடபுத்தகங்களில் இருந்து சீட்டுக்கட்டு தொடர்பான பாடங்கள் நீக்கம்!!

Thu Jun 8 , 2023
6 மற்றும் 10ஆம் வகுப்பு பள்ளி பாட புத்தகங்களில் சீட்டுக் கட்டு தொடர்பான பாடங்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் தலைவர்களும், கல்வியாளர்களும் கோரிக்கை விடுத்ததை அடுத்து, இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் 6ம் வகுப்புக்கான மூன்றாவது பருவ கணிதப் பாட நூலில்  முழுக்கள் என்ற தலைப்பிலான பாடம்  சீட்டுக்கட்டு உதாரணத்துடன் கொடுக்கப்பட்டிருந்தது. அதேபோல 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் புள்ளியியலும் நிகழ் தகவும் என்ற […]

You May Like