fbpx

Twist: 2024 லோக் சபா தேர்தல்…! தமிழ்நாடு முத்தரையர் சங்கம் அதிமுகவுக்கு ஆதரவு…!

தமிழ்நாடு முத்தரையர் சங்கம் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

கடந்த 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிட்டது. தற்போது பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது. அதிமுக கூட்டணி கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்க கட்சியின் பொதுச் செயலாளரும் முடிவு செய்துள்ளார்.

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் இடம்பெறுவது தொடர்பான அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. ஒரு வெற்றிக் கூட்டணியை அமைப்பதே எங்கள் நோக்கம். எங்களுக்கு எத்தனை தொகுதிகள் வேண்டும் என்று குழுவிடம் தெரிவித்துள்ளோம், அதிமுகவுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் புரட்சி பாரதம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் அதிமுக கூட்டணியில் இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு முத்தரையர் சங்கம் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் முத்தரையர் சமூகத்தின் வாக்கு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக கூட்டணி, சட்டசபை தேர்தலை சந்தித்த அதே கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளது. கூட்டணியை இறுதி செய்ய பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில் இருந்து பாரிவேந்தரின் இந்திய தேசிய ஜனநாயக கட்சி மட்டுமே வெளியேறி பாஜகவில் இணைந்துவிட்டது. அதை ஈடுசெய்ய கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இணையும் என்று கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் மியூசிக் உடனான தொகுதி பங்கீடு இன்னும் இழுபறியில் உள்ளது.

Vignesh

Next Post

Summer : தொடங்கிய கோடை வெயில்... சீரான குடிநீர் விநியோகம் செய்ய உத்தரவு...! உடனே இந்த எண்ணுக்கு புகார் செய்யலாம்...!

Wed Mar 6 , 2024
கோடைக்காலத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்வதற்கு ஏதுவாக சேலம் மாவட்டத்தில் மண்டல அளவிலான பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; எதிர்வரும் கோடைக்காலத்தில் சீரான குடிநீர் விநியோகம் வழங்கப்படுவதை உறுதிசெய்திடும் வகையிலும், குடிநீர் தேவைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் கோரிக்கைகளின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சேலம் மாவட்ட ஆட்சியரக கட்டுப்பாட்டு அறையினை 1077 மற்றும் 0427-2450498 ஆகிய எண்களில் […]

You May Like