fbpx

தமிழ்நாட்டிற்கு மாற்றம் தேவை; அரசியலுக்கு வருவேன் – நடிகர் விஷால்

வரவேண்டிய நேரத்தில் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் என்று சேலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘ரத்தினம்’ திரைப்படம் வரும் 26ஆம் தேதி வெளியாகிறது.இந்த நிலையில் சேலம் அம்மாபேட்டையில் திரைப்படக் குழு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடியது. அப்போது கல்லூரி மாணவர் ஒருவர் கடந்த 19ம் தேதி வாக்களிக்க சைக்கிளில் சென்றது குறித்த கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளித்த விஷால், விஜய் மாதிரி இருக்கணும்னு நெனச்சி சைக்கிளில் போகல, என்கிட்ட வண்டி இல்ல. அப்பாவுக்கு மட்டும் ஒரு வண்டி இருக்கு. இன்னைக்கு இருக்கிற ரோடு கண்டிஷனுக்கு வண்டில போறது கஷ்டம் என்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், “வரவேண்டிய நேரத்தில் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். எந்தக் கட்சியோடு கூட்டணி, சீட் ஒதுக்கீடு என்பது பற்றியெல்லாம் யோசிக்கக் கூடாது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதை மட்டும் யோசித்து கட்சியை தொடங்க வேண்டும்.2026ஆம் ஆண்டில் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லியுள்ளேன்.

இன்னொருத்தருக்கு ஏன் நீங்கள் வழி கொடுக்கிறீர்கள். நீங்கள் மக்களுக்கு நல்லது செய்துவிட்டால் நாங்கள் எங்கள் தொழிலை விட்டுவிட்டு உங்கள் தொழிலுக்கு வரமாட்டோம். தமிழ்நாட்டில் குறைகள் இல்லாத இடமே இல்லை. தமிழ்நாட்டில் எத்தனையோ கட்சிகள், கொடிகள் இருக்கின்றன. ஆனால், நல்லது எதுவும் நடக்கவில்லை. புதிதாக நான் வந்தாலும் நான் வந்து என்ன செய்வேன் என்பதைத்தான் அனைவரும் சொல்லுவார்கள்.

ஒரு வாக்காளராக. சமூக சேவகராக என்னுடைய ஆதங்கத்தை நான் சொல்கிறேன். திமுக, அதிமுக என எந்த கட்சியாக இருந்தாலும் கவனம் செலுத்த வேண்டியது மக்களின் அடிப்படை பிரச்சனைகளை சரி செய்வதுதான். மக்கள் ஏதாவது பிரச்சனை என்றால் அரசு மருத்துவமனைக்கு செல்வார்கள். எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் போன்ற நபர்கள் தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுகிறார்கள்.

மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்தாமல் அவர்கள் மட்டும் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுகின்றனர். தமிழ்நாட்டிற்கு மாற்றம் அவசியம் தேவை. இந்த ஆண்டு இறுதிக்குள் நடிகர் சங்க கட்டடம் முடிக்கப்படும். நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைப்பது குறித்து நடிகர் சங்கத்தில் பெரிய ஜாம்பவான்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து திருமணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நடிகர் விஷால் இந்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் திருமணம் முடிந்துவிடும் என்றார்.

Read More:

Rupa

Next Post

இந்த சமயத்தில் கோழி இறைச்சி, முட்டை சாப்பிடலாமா..? மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன..?

Tue Apr 23 , 2024
கேரளாவில் பறவை காய்ச்சல் பீதி அதிகரித்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டிலும் காய்ச்சல் பரவாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பறவை காய்ச்சல் பீதியால் கோழி விற்பனை சற்றே குறைந்திருப்பதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சில கோழி மற்றும் வாத்து பண்ணைகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், அங்கு உச்சபட்ச கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் கேரளா […]

You May Like